• Jan 13 2026

பருத்தித்துறை பாரம்பரிய சின்னங்களின் அமைவிடத்தில் புதிய அறிவித்தல் பலகைகள்!

dileesiya / Jan 12th 2026, 3:37 pm
image

பருத்தித்துறை நகரசபை எல்லைக்குட்பட்டு காணப்படும் தொன்மையான பாரம்பரிய சின்னங்களின் அமைவிடத்தில் புதிய அறிவித்தல் பலகைகள் நேற்றைய தினம் (11) ஞாயிற்றுக்கிழமை நாட்டிவைக்கப்பட்டுள்ளது.


தொல்பொருள் திணைக்களம் மற்றும் வட மாகாண சுற்றுலாத்துறை பணியகம் என்பன இணைந்து பருத்தித்துறை யில் உள்ள பாரம்பரிய சின்னங்கள், இடங்களில் மும்மொழிகளிலும் வரலாற்று தகவல்கள் அடங்கிய அறிவித்தல் பலகை நாட்டப்பட்டுள்ளது. 


அந்தவகையில் பருத்தித்துறை நகரசபை எல்லைக்குட்பட்டு தொன்மையான பாரம்பரிய இடங்களான, பழமை வாய்ந்த தும்பளை வீதியில் உள்ள தெருமுடி மடம், துறைமுக பகுதியில் உள்ள பழைய சுங்க கட்டிடம் மற்றும் கலங்கரை விளக்கம் ஆகிய இடங்களில் அறிவித்தல் பலகைகள் நாட்டிவைக்கப்பட்டுள்ளது. 


இதன்போது பருத்தித்துறை நகர பிதா வின்சென் டீ போல் டக்ளஸ் பொல் மற்றும் வடக்கு மாகாண தொல்பொருள் திணைக்களம், சுற்றுலா பணியக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் பங்கேற்றிருந்தனர். 


நாட்டிற்குள் அதிகளவான சர்வதேச சுற்றுலாவிகள் வருகைதரும் நிலையில் வடக்கு மாகாணத்திற்கும் சர்வதேச, உள்நாட்டு சுற்றுலாவிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். 


இவ்வாறு வருகைதரும் சுற்றுலாவிகளுக்கு குறித்த பாரம்பரிய சின்னங்கள், இடங்கள் தொடர்பான வரலாற்று தகவல்களை அறிந்துகொள்வதற்கு ஏதுவாக அறிவித்தல் பலகைகள் புதுப்பிக்கப்பட்டு நாட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


பருத்தித்துறை பாரம்பரிய சின்னங்களின் அமைவிடத்தில் புதிய அறிவித்தல் பலகைகள் பருத்தித்துறை நகரசபை எல்லைக்குட்பட்டு காணப்படும் தொன்மையான பாரம்பரிய சின்னங்களின் அமைவிடத்தில் புதிய அறிவித்தல் பலகைகள் நேற்றைய தினம் (11) ஞாயிற்றுக்கிழமை நாட்டிவைக்கப்பட்டுள்ளது.தொல்பொருள் திணைக்களம் மற்றும் வட மாகாண சுற்றுலாத்துறை பணியகம் என்பன இணைந்து பருத்தித்துறை யில் உள்ள பாரம்பரிய சின்னங்கள், இடங்களில் மும்மொழிகளிலும் வரலாற்று தகவல்கள் அடங்கிய அறிவித்தல் பலகை நாட்டப்பட்டுள்ளது. அந்தவகையில் பருத்தித்துறை நகரசபை எல்லைக்குட்பட்டு தொன்மையான பாரம்பரிய இடங்களான, பழமை வாய்ந்த தும்பளை வீதியில் உள்ள தெருமுடி மடம், துறைமுக பகுதியில் உள்ள பழைய சுங்க கட்டிடம் மற்றும் கலங்கரை விளக்கம் ஆகிய இடங்களில் அறிவித்தல் பலகைகள் நாட்டிவைக்கப்பட்டுள்ளது. இதன்போது பருத்தித்துறை நகர பிதா வின்சென் டீ போல் டக்ளஸ் பொல் மற்றும் வடக்கு மாகாண தொல்பொருள் திணைக்களம், சுற்றுலா பணியக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் பங்கேற்றிருந்தனர். நாட்டிற்குள் அதிகளவான சர்வதேச சுற்றுலாவிகள் வருகைதரும் நிலையில் வடக்கு மாகாணத்திற்கும் சர்வதேச, உள்நாட்டு சுற்றுலாவிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். இவ்வாறு வருகைதரும் சுற்றுலாவிகளுக்கு குறித்த பாரம்பரிய சின்னங்கள், இடங்கள் தொடர்பான வரலாற்று தகவல்களை அறிந்துகொள்வதற்கு ஏதுவாக அறிவித்தல் பலகைகள் புதுப்பிக்கப்பட்டு நாட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement