• Sep 07 2025

காருடன் மோதிய மோட்டார் சைக்கிள் ; ஒருவர் படுகாயம் - உரும்பிராயில் விபத்து!

shanuja / Sep 6th 2025, 5:53 pm
image

காருடன் மோட்டார் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் நபரொருவர் படுகாயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


இந்த விபத்து கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலாலி வீதி, உரும்பிராய்ப் பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது. 


விபத்து தொடர்பில் தெரிய வருகையில்,


பலாலி வீதியால் கார் ஒன்று பயணித்துக்கொண்டிருந்தது. இதன்போது காருக்கு முன்னால் திடீரென ஒரு சைக்கிள்  குறுக்கே வந்தது. 


சைக்கிள் குறுக்கே வந்ததால்  காரின் சாரதி வாகனத்தை சடுதியாக நிறுத்தியுள்ளார். இதன்போது காருக்கு பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் காரின் மீது மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. 


இதன்போது மோட்டார் சைக்கிள் சாரதி காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். 


விபத்து  தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காருடன் மோதிய மோட்டார் சைக்கிள் ; ஒருவர் படுகாயம் - உரும்பிராயில் விபத்து காருடன் மோட்டார் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் நபரொருவர் படுகாயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலாலி வீதி, உரும்பிராய்ப் பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பில் தெரிய வருகையில்,பலாலி வீதியால் கார் ஒன்று பயணித்துக்கொண்டிருந்தது. இதன்போது காருக்கு முன்னால் திடீரென ஒரு சைக்கிள்  குறுக்கே வந்தது. சைக்கிள் குறுக்கே வந்ததால்  காரின் சாரதி வாகனத்தை சடுதியாக நிறுத்தியுள்ளார். இதன்போது காருக்கு பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் காரின் மீது மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இதன்போது மோட்டார் சைக்கிள் சாரதி காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். விபத்து  தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement