எல்ல-வெல்லவாய பஸ் விபத்தில் காயமடைந்தவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை என வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்தார்.
எல்ல பிரதான வீதியில் நேற்று (04) இரவு நடந்த கோர பேருந்து விபத்தில் காயமடைந்தவர்கள் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களின் நிலைமை தற்போது சீராகி வருவதாகவும்,
அவர்களில் யாருக்கும் உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், அவசர அறுவை சிகிச்சைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளன.
நோயாளிகள் தற்போது அந்தந்த வார்டுகளில் சிகிச்சை பெறுகின்றனர்.
குறிப்பாக, குழந்தைகளின் நிலைமை நன்றாக உள்ளது. அவர்களுக்கு உயிருக்கு ஆபத்து இல்லை.
தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) உள்ள இரண்டு நோயாளிகளுக்கும் பெரிய ஆபத்து இல்லை.
இந்த உயிர்களைக் காப்பாற்ற அனைவரும் கடினமாக உழைத்தனர். இதில் நாம் அனைவரும் மகிழ்ச்சியடையலாம்
விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உயிரைக் காப்பாற்ற உதவிய வைத்தியக் குழுவினர், இராணுவம் மற்றும் எல்ல பிரதேசவாசிகளுக்கு நன்றி என்றார்.
எல்ல பஸ் விபத்து; காயமடைந்தவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை எல்ல-வெல்லவாய பஸ் விபத்தில் காயமடைந்தவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை என வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்தார்.எல்ல பிரதான வீதியில் நேற்று (04) இரவு நடந்த கோர பேருந்து விபத்தில் காயமடைந்தவர்கள் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களின் நிலைமை தற்போது சீராகி வருவதாகவும், அவர்களில் யாருக்கும் உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் தெரிவித்தார்.மேலும், அவசர அறுவை சிகிச்சைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளன. நோயாளிகள் தற்போது அந்தந்த வார்டுகளில் சிகிச்சை பெறுகின்றனர். குறிப்பாக, குழந்தைகளின் நிலைமை நன்றாக உள்ளது. அவர்களுக்கு உயிருக்கு ஆபத்து இல்லை. தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) உள்ள இரண்டு நோயாளிகளுக்கும் பெரிய ஆபத்து இல்லை. இந்த உயிர்களைக் காப்பாற்ற அனைவரும் கடினமாக உழைத்தனர். இதில் நாம் அனைவரும் மகிழ்ச்சியடையலாம்விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உயிரைக் காப்பாற்ற உதவிய வைத்தியக் குழுவினர், இராணுவம் மற்றும் எல்ல பிரதேசவாசிகளுக்கு நன்றி என்றார்.