பிலடெல்பியாவிலிருந்து மியாமிக்கு பயணித்த ஃபிரான்டியர் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏற்பட்ட மோதலால், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இஷான் சர்மா (21) கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜூன் 30ஆம் திகதி, பயணத்தின் போது அவர் மற்றும் அருகில் இருந்த பயணி கீனு எவன்ஸ் இடையே வாக்குவாதம் வெடித்து, அது கைதாக்கும் அளவுக்கு சென்றது. இருவரும் ஒருவரையொருவர் கழுத்தைப் பிடித்து சண்டையிட்ட சம்பவம், சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
வன்ஸின் கூற்றுப்படி, சர்மாவின் நடத்தை விசித்திரமாக இருந்ததாகவும், அது தன்னை அச்சுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
சவன்ஸ் என்பவர், சர்மா தொடர்ந்து தொந்தரவு செய்ததாகவும், உதவி பொத்தானை அழுத்தியதும் அவர் தாக்குதலுக்கு ஆளாகியதாகவும் கூறியுள்ளார். சர்மா தனது கழுத்தை நெரித்ததாகவும் புகார் அளித்துள்ளார்.
தற்காப்பிற்காகவே தான் சண்டையிட வேண்டியிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், விமானம் மியாமியில் தரையிறங்கியதும், இஷான் சர்மாவை கைது செய்துள்ளதுடன் அவர் மீது தாக்குதல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், நீதிமன்றத்தில் சர்மாவின் வழக்கறிஞர் புதிய கோணத்தை முன்வைத்துள்ளார்.
சர்மா தனது மதநம்பிக்கையின் கீழ் தியானத்தில் ஈடுபட்டிருப்பதையே எவன்ஸ் பொறுக்கவில்லை என்றும், அதுவே மோதலுக்குக் காரணமாக மாறியதாகவும் வாதிட்டுள்ளார்.
நடுவானில் நடந்த மோதல்: பயணிகள் பதற்றம்- நடந்தது என்ன பிலடெல்பியாவிலிருந்து மியாமிக்கு பயணித்த ஃபிரான்டியர் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏற்பட்ட மோதலால், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இஷான் சர்மா (21) கைது செய்யப்பட்டுள்ளார். ஜூன் 30ஆம் திகதி, பயணத்தின் போது அவர் மற்றும் அருகில் இருந்த பயணி கீனு எவன்ஸ் இடையே வாக்குவாதம் வெடித்து, அது கைதாக்கும் அளவுக்கு சென்றது. இருவரும் ஒருவரையொருவர் கழுத்தைப் பிடித்து சண்டையிட்ட சம்பவம், சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. வன்ஸின் கூற்றுப்படி, சர்மாவின் நடத்தை விசித்திரமாக இருந்ததாகவும், அது தன்னை அச்சுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.சவன்ஸ் என்பவர், சர்மா தொடர்ந்து தொந்தரவு செய்ததாகவும், உதவி பொத்தானை அழுத்தியதும் அவர் தாக்குதலுக்கு ஆளாகியதாகவும் கூறியுள்ளார். சர்மா தனது கழுத்தை நெரித்ததாகவும் புகார் அளித்துள்ளார்.தற்காப்பிற்காகவே தான் சண்டையிட வேண்டியிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.இந்நிலையில், விமானம் மியாமியில் தரையிறங்கியதும், இஷான் சர்மாவை கைது செய்துள்ளதுடன் அவர் மீது தாக்குதல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், நீதிமன்றத்தில் சர்மாவின் வழக்கறிஞர் புதிய கோணத்தை முன்வைத்துள்ளார். சர்மா தனது மதநம்பிக்கையின் கீழ் தியானத்தில் ஈடுபட்டிருப்பதையே எவன்ஸ் பொறுக்கவில்லை என்றும், அதுவே மோதலுக்குக் காரணமாக மாறியதாகவும் வாதிட்டுள்ளார்.