• Aug 01 2025

மன்னார் மாவட்ட மேலதிக அரச அதிபர்கள் கடமைகளை பொறுப்பேற்பு!

shanuja / Jul 30th 2025, 2:35 pm
image

மன்னார் மாவட்டத்திற்கு நிர்வாகம் மற்றும் காணி விவகாரங்களுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்ட மேலதிக அரசாங்க அதிபர்கள் இருவர் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளனர்.   


பொது நிர்வாக அமைச்சினால் நியமிக்கப்பட்ட இருவரும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் முன்னிலையில் இன்று  (30) காலை  தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டனர்.


மன்னார் பிரதேசச் செயலாளராக கடமையாற்றிய  மனோகரன் பிரதீப் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் - நிர்வாகத்திற்கும், மடு பிரதேச  செயலாளராக கடமையாற்றிய  கீ.பீட் நிஜாகரன்  மன்னார் மாவட்ட  மேலதிக அரச அதிபர் - காணி பதவிக்கும்  நியமிக்கப்பட்டுள்ளனர் 



மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் - நிர்வாகத்திற்கு நியமிக்கப்பட்ட மனோகரன் பிரதீப்  2012 இல் இலங்கை நிர்வாக சேவையில் இணைந்து, 2013 தொடக்கம் 2015 வரை உதவி பிரதேச செயலாளராக மாத்தளை மாவட்டம் ரத்தோட்டை பிரதேச செயலகத்திலும், 2015 முதல் 2020 வரை உதவி பிரதேச செயலாளராக கண்டாவளை பிரதேச செயலகத்திலும், 2020 தொடக்கம் பிரதேச செயலாளராக

மன்னாரிலும் பணியாற்றி வந்த நிலையிலே மேலதிக அரசாங்க அதிபர் நிர்வாகத்திற்கு பதவி உயர்வு பெற்றுள்ளார்.


மன்னார் மாவட்ட  மேலதிக அரச அதிபர் - காணிக்கு நியமிக்கப்பட்டுள்ள கீ.பீட் நிஜாகரன்   2013 இல் இருந்து 2020-08-09வரை திருகோணமலை உதவி காணி ஆணையாராகவும் , 2020-08-10 இருந்து 2021-01-19 வரை முல்லைத்தீவு கமநல அபிவிருத்தித் திணைக்கள உதவி ஆணையாளராகவும், 2021-01-20 இருந்து 2021-02-28 வரை மன்னாரில் கமநல அபிவிருத்தித் திணைக்கள உதவி ஆணையாளராகவும் பணியாற்றியவர். 2021-03-01 முதல் அவர் மடுப் பிரதேச செயலாளராக பணியாற்றிவந்த நிலையிலே மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் காணிக்கு பதவி உயர்வு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் மாவட்ட மேலதிக அரச அதிபர்கள் கடமைகளை பொறுப்பேற்பு மன்னார் மாவட்டத்திற்கு நிர்வாகம் மற்றும் காணி விவகாரங்களுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்ட மேலதிக அரசாங்க அதிபர்கள் இருவர் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளனர்.   பொது நிர்வாக அமைச்சினால் நியமிக்கப்பட்ட இருவரும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் முன்னிலையில் இன்று  (30) காலை  தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டனர்.மன்னார் பிரதேசச் செயலாளராக கடமையாற்றிய  மனோகரன் பிரதீப் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் - நிர்வாகத்திற்கும், மடு பிரதேச  செயலாளராக கடமையாற்றிய  கீ.பீட் நிஜாகரன்  மன்னார் மாவட்ட  மேலதிக அரச அதிபர் - காணி பதவிக்கும்  நியமிக்கப்பட்டுள்ளனர் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் - நிர்வாகத்திற்கு நியமிக்கப்பட்ட மனோகரன் பிரதீப்  2012 இல் இலங்கை நிர்வாக சேவையில் இணைந்து, 2013 தொடக்கம் 2015 வரை உதவி பிரதேச செயலாளராக மாத்தளை மாவட்டம் ரத்தோட்டை பிரதேச செயலகத்திலும், 2015 முதல் 2020 வரை உதவி பிரதேச செயலாளராக கண்டாவளை பிரதேச செயலகத்திலும், 2020 தொடக்கம் பிரதேச செயலாளராகமன்னாரிலும் பணியாற்றி வந்த நிலையிலே மேலதிக அரசாங்க அதிபர் நிர்வாகத்திற்கு பதவி உயர்வு பெற்றுள்ளார்.மன்னார் மாவட்ட  மேலதிக அரச அதிபர் - காணிக்கு நியமிக்கப்பட்டுள்ள கீ.பீட் நிஜாகரன்   2013 இல் இருந்து 2020-08-09வரை திருகோணமலை உதவி காணி ஆணையாராகவும் , 2020-08-10 இருந்து 2021-01-19 வரை முல்லைத்தீவு கமநல அபிவிருத்தித் திணைக்கள உதவி ஆணையாளராகவும், 2021-01-20 இருந்து 2021-02-28 வரை மன்னாரில் கமநல அபிவிருத்தித் திணைக்கள உதவி ஆணையாளராகவும் பணியாற்றியவர். 2021-03-01 முதல் அவர் மடுப் பிரதேச செயலாளராக பணியாற்றிவந்த நிலையிலே மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் காணிக்கு பதவி உயர்வு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement