• May 02 2025

கூரை வேய்ந்த நபர் கீழே விழுந்து மரணம்!

Chithra / May 1st 2025, 7:47 am
image


புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கூரை வேய்வதற்கு சென்று கீழே விழுந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். 

8ஆம் வட்டாரம் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ஜோர்ஜ் அன்ரனிதாஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் கடந்த 20ஆம் திகதி கூரை வேய்வதற்கு சென்றுள்ளார்.

 இதன்போது தவறுதலாக கூரையில் இருந்து விழுந்த நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து மாஞ்சோலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பின்னர் அன்று மாலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். 

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றுமாலை உயிரிழந்துள்ளார். 

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

கூரை வேய்ந்த நபர் கீழே விழுந்து மரணம் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கூரை வேய்வதற்கு சென்று கீழே விழுந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். 8ஆம் வட்டாரம் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ஜோர்ஜ் அன்ரனிதாஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த நபர் கடந்த 20ஆம் திகதி கூரை வேய்வதற்கு சென்றுள்ளார். இதன்போது தவறுதலாக கூரையில் இருந்து விழுந்த நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து மாஞ்சோலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.பின்னர் அன்று மாலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றுமாலை உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement