முல்லைத்தீவு பொலிஸாரின் பரிசோதனை நிகழ்வும் அணிவகுப்பும் முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பொது விளையாட்டு மைதானத்தில் இன்று (30) காலை இடம்பெற்றது.
முல்லைத்தீவு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரத்ணவீர எல் அடசூரிய பொலிஸாரின் உடை மற்றும் வாகனங்களை பார்வையிட்டதுடன், முல்லைத்தீவு நகர வீதி வழியான பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றிருந்தார்.
அத்துடன் முல்லைத்தீவு மைதானத்தில் அணி வகுப்பு மரியாதை இடம்பெற்று பொலிஸாரையும் , பொலிஸாரின் உடமைகள் பரிசோதிக்கப்பட்டதனைத் தொடர்ந்து மைதானத்தில் இருந்து முல்லைத்தீவு பொலிஸ் நிலையம் வரை பாண்ட், மேள வாத்தியத்துடன் அணிவகுப்பாக சென்று முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் நிறைவடைந்திருந்தது.
குறித்த நிகழ்வில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் அசோக பெரேரா , முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.ஐ.அமரசிங்க, கிராம சேவையாளர்கள், பொலிஸார், கரைதுறைப்பற்று பிரதேச சபை தபிசாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
முல்லைத்தீவில் பொலிஸ் பரிசோதனையும் அணிவகுப்பும் முல்லைத்தீவு பொலிஸாரின் பரிசோதனை நிகழ்வும் அணிவகுப்பும் முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பொது விளையாட்டு மைதானத்தில் இன்று (30) காலை இடம்பெற்றது. முல்லைத்தீவு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரத்ணவீர எல் அடசூரிய பொலிஸாரின் உடை மற்றும் வாகனங்களை பார்வையிட்டதுடன், முல்லைத்தீவு நகர வீதி வழியான பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றிருந்தார்.அத்துடன் முல்லைத்தீவு மைதானத்தில் அணி வகுப்பு மரியாதை இடம்பெற்று பொலிஸாரையும் , பொலிஸாரின் உடமைகள் பரிசோதிக்கப்பட்டதனைத் தொடர்ந்து மைதானத்தில் இருந்து முல்லைத்தீவு பொலிஸ் நிலையம் வரை பாண்ட், மேள வாத்தியத்துடன் அணிவகுப்பாக சென்று முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் நிறைவடைந்திருந்தது.குறித்த நிகழ்வில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் அசோக பெரேரா , முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.ஐ.அமரசிங்க, கிராம சேவையாளர்கள், பொலிஸார், கரைதுறைப்பற்று பிரதேச சபை தபிசாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.