• Jul 15 2025

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்; திரையுலகினர் அதிர்ச்சி!

Chithra / Jul 14th 2025, 11:49 am
image

 

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவு காரணமாக இன்று தனது 87ஆவது வயதில் காலமானார். 

பெங்களூருவில் உள்ள இல்லத்தில் இன்று காலமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இந்திய திரைத்துறை வரலாற்றில் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை சரோஜா தேவி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.

எம்.ஜி.ஆர். உடன் 26 படங்களிலும், சிவாஜி கணேசனுடன் 22 படங்களிலும் நடித்துள்ளார். 

50 ஆண்டுகால திரை வாழ்வில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 

நடிப்பிற்காக கன்னடத்துப் பைங்கிளி, அபிநய சரஸ்வதி உள்ளிட்ட அடைமொழிகளில் ரசிகர்களால் அழைக்கப்பட்டவர்.

அத்துடன் இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகளையும் சரோஜா தேவி பெற்றுள்ளார். 

சரோஜா தேவியின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்; திரையுலகினர் அதிர்ச்சி  பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவு காரணமாக இன்று தனது 87ஆவது வயதில் காலமானார். பெங்களூருவில் உள்ள இல்லத்தில் இன்று காலமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்திய திரைத்துறை வரலாற்றில் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை சரோஜா தேவி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.எம்.ஜி.ஆர். உடன் 26 படங்களிலும், சிவாஜி கணேசனுடன் 22 படங்களிலும் நடித்துள்ளார். 50 ஆண்டுகால திரை வாழ்வில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிப்பிற்காக கன்னடத்துப் பைங்கிளி, அபிநய சரஸ்வதி உள்ளிட்ட அடைமொழிகளில் ரசிகர்களால் அழைக்கப்பட்டவர்.அத்துடன் இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகளையும் சரோஜா தேவி பெற்றுள்ளார். சரோஜா தேவியின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement