• Aug 12 2025

படுகொலைகளை துணிவோடு வெளியிட்ட ஊடகவியலாளர்; இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழப்பு - அல்ஜசீரா ஊடகம் கடும் கண்டனம்!

shanuja / Aug 11th 2025, 10:25 am
image

காஸா மக்கள் மீதான இனப்படுகொலைகளை துணிச்சலோடு வெளியிட்டு வந்த அல்ஜசீரா ஊடகத்தின் இளம் ஊடகவியலாளரான அனஸ் அல்-ஷெரிப் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். 


காஸாவின் கிழக்கு மற்றும் தென்பகுதியில் இஸ்ரேலிய போர் விமானங்கள் நெருப்பு குண்டுகளை வீசி தாக்குதல் மேற்கொண்டது. அதில் காஸா  நகரத்தின் ஷிஃபா மருத்துவமனையில் உள்ள பத்திரிகையாளர் கூடாரத்தின் மீதும்  தாக்குதல் நடத்தப்பட்டது. 


குறித்த தாக்குதலிலேயே பிரபல அல்ஜசீரா ஊடகத்தின் துணிச்சல்மிகு இளம் செய்தியாளர்  அனஸ் அல்-ஷெரிப் கொல்லப்பட்டார் என்று தெரிவிக்கப்படுகின்றது. 


துணிச்சலான பத்திரிகையாளர்  அனஸ் அல்-ஷெரீப்  கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக, காஸா மக்கள் மீதான இஸ்ரேலிய இனப்படுகொலையை  தைரியத்துடனும் கொள்கையுடனும் ஆவணப்படுத்தினார். 


அவரது குரலுக்காக இஸ்ரேல் அவரை தனது கொலைப்பட்டியலில் சேர்த்து கொன்று குவித்துள்ளது. இந்த தாக்குதலில் மேலும் பல செய்தியாளர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 


துணிச்சல் மிகு இளம் ஊடகவியலாளரின் உயிரிழப்பு பல ஊடகவியலாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் கொல்லப்பட்ட செய்தியையும் அறிந்ததும் பல ஊடகவியலாளர்கள் தமது சமூக வலைத்தளங்களில் இரங்கலை வெளியிட்டு வருகின்றனர். 


அந்தப் பதிவுகளில் காஸாவில் இஸ்ரேல் நடத்தும்  இன அழிப்பு யுத்தத்தை  வெளி உலகுக்கு எடுத்துச்சொன்ன  Al Jazeera ஊடகவியலாளர் அனாஸ் அல்ஷரிஃப் இப்போது நம்மிடையே இல்லை.  பசி, பட்டினி அச்சுறுத்தலுக்கு இடையே கடந்த 673  நாட்களாக களத்தில் இருந்து செய்திகளை எடுத்துச்சொன்ன அனாஸ் அல்ஷரிஃப் கொல்லப்பட்டு விட்டார் என்றவாறாக பதிவிட்டு வருகின்றனர். 


அனாஸ் அல்ஷரிஃப் கொல்லப்படுவதற்கு 5 மணி நேரத்துக்கு முன் தனது சமூக வலைத்தளத்தில் பதவிட்டுள்ளதாவது, "ஆக்கிரமிப்பு இப்போது  காசா மீது முழு அளவிலான படையெடுப்பை வெளிப்படையாக அச்சுறுத்துகிறது.


22 மாதங்களாக, நிலம், கடல் மற்றும் வான்வழித் தாக்குதல்களால் நகரம் இரத்தக்களரியாகக் காய்ந்து வருகிறது. பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர், லட்சக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.


இந்த பைத்தியக்காரத்தனம் முடிவுக்கு வரவில்லை என்றால், நீங்கள் நிறுத்த விரும்பாத ஒரு இனப்படுகொலையின் மௌன சாட்சிகளாக வரலாறு உங்களை நினைவில் கொள்ளும். தயவுசெய்து இந்தச் செய்தியைப் பகிரவும், உதவ சக்தி உள்ள அனைவரையும் டேக் செய்யவும்."- என்ற பதிவை வெளியிட்ட 

அடுத்த சில நிமிடங்களில் கொல்லப்பட்டு விட்டார். 

கடந்த அக்டோபரில் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கியதிலிருந்து காஸாவில் கொல்லப்பட்ட 106 பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் உட்பட இரண்டு லெபனான், 3 இஸ்ரேல் ஊடகவியலாளர்கள் என 111 பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர் என ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் குழு தெரிவித்துள்ளது.

படுகொலைகளை துணிவோடு வெளியிட்ட ஊடகவியலாளர்; இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழப்பு - அல்ஜசீரா ஊடகம் கடும் கண்டனம் காஸா மக்கள் மீதான இனப்படுகொலைகளை துணிச்சலோடு வெளியிட்டு வந்த அல்ஜசீரா ஊடகத்தின் இளம் ஊடகவியலாளரான அனஸ் அல்-ஷெரிப் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். காஸாவின் கிழக்கு மற்றும் தென்பகுதியில் இஸ்ரேலிய போர் விமானங்கள் நெருப்பு குண்டுகளை வீசி தாக்குதல் மேற்கொண்டது. அதில் காஸா  நகரத்தின் ஷிஃபா மருத்துவமனையில் உள்ள பத்திரிகையாளர் கூடாரத்தின் மீதும்  தாக்குதல் நடத்தப்பட்டது. குறித்த தாக்குதலிலேயே பிரபல அல்ஜசீரா ஊடகத்தின் துணிச்சல்மிகு இளம் செய்தியாளர்  அனஸ் அல்-ஷெரிப் கொல்லப்பட்டார் என்று தெரிவிக்கப்படுகின்றது. துணிச்சலான பத்திரிகையாளர்  அனஸ் அல்-ஷெரீப்  கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக, காஸா மக்கள் மீதான இஸ்ரேலிய இனப்படுகொலையை  தைரியத்துடனும் கொள்கையுடனும் ஆவணப்படுத்தினார். அவரது குரலுக்காக இஸ்ரேல் அவரை தனது கொலைப்பட்டியலில் சேர்த்து கொன்று குவித்துள்ளது. இந்த தாக்குதலில் மேலும் பல செய்தியாளர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. துணிச்சல் மிகு இளம் ஊடகவியலாளரின் உயிரிழப்பு பல ஊடகவியலாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் கொல்லப்பட்ட செய்தியையும் அறிந்ததும் பல ஊடகவியலாளர்கள் தமது சமூக வலைத்தளங்களில் இரங்கலை வெளியிட்டு வருகின்றனர். அந்தப் பதிவுகளில் காஸாவில் இஸ்ரேல் நடத்தும்  இன அழிப்பு யுத்தத்தை  வெளி உலகுக்கு எடுத்துச்சொன்ன  Al Jazeera ஊடகவியலாளர் அனாஸ் அல்ஷரிஃப் இப்போது நம்மிடையே இல்லை.  பசி, பட்டினி அச்சுறுத்தலுக்கு இடையே கடந்த 673  நாட்களாக களத்தில் இருந்து செய்திகளை எடுத்துச்சொன்ன அனாஸ் அல்ஷரிஃப் கொல்லப்பட்டு விட்டார் என்றவாறாக பதிவிட்டு வருகின்றனர். அனாஸ் அல்ஷரிஃப் கொல்லப்படுவதற்கு 5 மணி நேரத்துக்கு முன் தனது சமூக வலைத்தளத்தில் பதவிட்டுள்ளதாவது, "ஆக்கிரமிப்பு இப்போது  காசா மீது முழு அளவிலான படையெடுப்பை வெளிப்படையாக அச்சுறுத்துகிறது.22 மாதங்களாக, நிலம், கடல் மற்றும் வான்வழித் தாக்குதல்களால் நகரம் இரத்தக்களரியாகக் காய்ந்து வருகிறது. பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர், லட்சக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.இந்த பைத்தியக்காரத்தனம் முடிவுக்கு வரவில்லை என்றால், நீங்கள் நிறுத்த விரும்பாத ஒரு இனப்படுகொலையின் மௌன சாட்சிகளாக வரலாறு உங்களை நினைவில் கொள்ளும். தயவுசெய்து இந்தச் செய்தியைப் பகிரவும், உதவ சக்தி உள்ள அனைவரையும் டேக் செய்யவும்."- என்ற பதிவை வெளியிட்ட அடுத்த சில நிமிடங்களில் கொல்லப்பட்டு விட்டார். . கடந்த அக்டோபரில் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கியதிலிருந்து காஸாவில் கொல்லப்பட்ட 106 பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் உட்பட இரண்டு லெபனான், 3 இஸ்ரேல் ஊடகவியலாளர்கள் என 111 பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர் என ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் குழு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement