இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி இன்றையதினம் (07) மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு, மீள பெற முடியாத வகையில் சமஸ்டி முறையிலான அதிகார பகிர்வை வலியுறுத்தும் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் மூன்றாவது ஆண்டு தொடர்ச்சியும் மற்றும் அதனுடன் தொடர்புடைய கவனயீர்ப்பு போராட்டமானது 100 நாள் செயல்முறையில் 7 வது நாளான இன்றையதினம் மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அந்தோனியார்புரம் பகுதியில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
"சமஸ்டி முறையிலான அதிகார பகிர்வே தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய ஒரே தீர்வாகும்" என ஒரே கோசத்துடன் இந்த கவனயீர்ப்பு நடவடிக்கையில் பெரும் எண்ணிக்கையான மக்கள் கலந்துகொண்டு வலியுறுத்தியிருந்தனர்.
தொடர்ச்சியாக 100 நாட்கள் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களிலும் சுழற்சி முறையில் குறித்த தரப்பினரால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
போராட்டத்தின் இறுதியில் அவர்களது கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றும் வாசிக்கப்பட்டது இந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவத
1948இற்குப் பிள்வரான இலங்கையின் 75 வருட்கால அரசியல் வரலாற்றில், இனத்துவ அரசியலே மேலோங்கி காணப்படுகிறது. இலங்கை அரசானது சிங்கள் பெரும்பான்மை இனத்தைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற அரசாங்கங்களாலும் தலைவர்களாலும் ஆளப்பட்டு வருகிறது.
1908 முதற்கொண்டு ஏனைய தேசிய இளங்களான வடக்கு கிழக்கு தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள், மலையகத் தமிழ் ஆகியோருக்கு அரச அதிகாரத்தில் உரிய பங்கு வழங்கப்படவில்லை அரசியல் அதிகாரம் உரிய முறையில் பகிர்ந்துகொள்ளப்படவில்லை. மாறாக மொழிரீதியான மத ரீதியான அடக்குமுறைகள் மேலோங்கின
தற்போது, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய தலைமைத்துவங்களுடன் இலங்கையில் ஆட்சிப் பொறுப்பைற்றுள்ளது. "ஜனநாயகம்", "நட்டமைப்பு மாற்றம்". "இன மத பேதமின்மை" எனும் கொள்கைகளை முன்வைத்து இவர்கள் ஆட்சிக்கு வந்துள்ளன னும் அரசியல் தீர்வு குறித்து தேசிய மக்கள் சக்தி அரசு மௌனம் காத்துவருகிறது.
வடக்கு கிழக்கில் இராணுவமயமாக்கம், காணி அபகரிப்பு தொல்பொருள் நிணைக்களத்தில் ஆக்கிரமிப்பு மாகாவலி குடியேற்றம் மற்றும் சிங்கள் மயமாக்கம், பௌத்த மயமாக்கம், தமிழ் மொழி உரி உரிமை புறக்கணிப்பு, இளவாத அச்சுறுத்தல்கள் ஆகியன தொடர்ந்த வண்ணம் உள்ளன.
இந்த அடக்குமுறைகள் அனைத்தையும் வைத்துக்கொண்டு "இன மத பேதமின்மை" குறித்து அரசு கதைப்பது நேர்மையின்மையாகும். வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் எழுபது ஆண்டுகளுக்கு மேலாக முன்வைத்து வரும் சமஷ்டி முறையிலான அரசியல் அதிகாரப் பகிர்வுக்கான கோரிக்கையை "இன மத பேதமின்மை" எனும் கோஷத்தின் பின்னால் மறைக்கவோ மறுதலிக்கவோ முடியாது.
மேலும், 2015ஆம் ஆண்டு, ஐநா, மனித உரிமைகள் பேரவையின் திர்மானம் 30/1 இல் இலங்கை அரசு இணைப் பங்காளராக இருந்து கையொப்பம் இட்டுள்ளது. இத்தீர்மானத்தின் ஏற்பாடு 20 ஆனது அரசியல் அதிகாரப் பரவலுக்கான இலங்கையின் கடப்பாட்டை கூறுகிறது.
ஆகவே. இவைாதத்தில் சர்ந்திருந்த பழைய அரசுகளைப் போல் இல்லாது தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது, நிலையானதும் கௌரவமானதும் உரிமைகளுடன் கூடிய சமஷ்டி முறையிலான அரசியல் அதிகாரப் பகிர்வை உறுதிப்படுத்தும் தீர்வுத் திட்டத்தை உடன் முன்னெடுக்கக் கோருகிறோம்.
சமஷ்டி அரசியல் தீர்வு என்பது நாட்டைப் பிரிப்பது அல்ல. அது மிகவும் உயரிய ஜனநாயக அரசியல் அமைப்பின் வெளிப்பாடாகும். போருக்குப் பின் ஜனநாயக அரசியலை முன்னெடுத்துவரும் நாடுகள், எமது அண்டை நாடான நேபாளம் அடங்கலாக, சமஷ்டி முறைமையையே பொருத்தமானதாக ஏற்று அமுல்படுத்துகின்றன.
எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட இன அடக்குமுறையையும் முப்பது வருடகால இன அழிப்பு யுத்தத்தையும் எதிர்கொண்ட இலங்கையின் வடக்கு கிழக்கு மக்களுக்கு பொருத்தமான அதிகாரப் பகிர்வு இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வாகும். இதுவே வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் திடமான அரசியல் அபிலாசையாகும் என்று அவர்களின் மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி மன்னாரில் கவனயீர்ப்பு இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி இன்றையதினம் (07) மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு, மீள பெற முடியாத வகையில் சமஸ்டி முறையிலான அதிகார பகிர்வை வலியுறுத்தும் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் மூன்றாவது ஆண்டு தொடர்ச்சியும் மற்றும் அதனுடன் தொடர்புடைய கவனயீர்ப்பு போராட்டமானது 100 நாள் செயல்முறையில் 7 வது நாளான இன்றையதினம் மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அந்தோனியார்புரம் பகுதியில் முன்னெடுக்கப்பட்டிருந்தது."சமஸ்டி முறையிலான அதிகார பகிர்வே தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய ஒரே தீர்வாகும்" என ஒரே கோசத்துடன் இந்த கவனயீர்ப்பு நடவடிக்கையில் பெரும் எண்ணிக்கையான மக்கள் கலந்துகொண்டு வலியுறுத்தியிருந்தனர்.தொடர்ச்சியாக 100 நாட்கள் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களிலும் சுழற்சி முறையில் குறித்த தரப்பினரால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.போராட்டத்தின் இறுதியில் அவர்களது கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றும் வாசிக்கப்பட்டது இந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவத1948இற்குப் பிள்வரான இலங்கையின் 75 வருட்கால அரசியல் வரலாற்றில், இனத்துவ அரசியலே மேலோங்கி காணப்படுகிறது. இலங்கை அரசானது சிங்கள் பெரும்பான்மை இனத்தைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற அரசாங்கங்களாலும் தலைவர்களாலும் ஆளப்பட்டு வருகிறது. 1908 முதற்கொண்டு ஏனைய தேசிய இளங்களான வடக்கு கிழக்கு தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள், மலையகத் தமிழ் ஆகியோருக்கு அரச அதிகாரத்தில் உரிய பங்கு வழங்கப்படவில்லை அரசியல் அதிகாரம் உரிய முறையில் பகிர்ந்துகொள்ளப்படவில்லை. மாறாக மொழிரீதியான மத ரீதியான அடக்குமுறைகள் மேலோங்கினதற்போது, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய தலைமைத்துவங்களுடன் இலங்கையில் ஆட்சிப் பொறுப்பைற்றுள்ளது. "ஜனநாயகம்", "நட்டமைப்பு மாற்றம்". "இன மத பேதமின்மை" எனும் கொள்கைகளை முன்வைத்து இவர்கள் ஆட்சிக்கு வந்துள்ளன னும் அரசியல் தீர்வு குறித்து தேசிய மக்கள் சக்தி அரசு மௌனம் காத்துவருகிறது.வடக்கு கிழக்கில் இராணுவமயமாக்கம், காணி அபகரிப்பு தொல்பொருள் நிணைக்களத்தில் ஆக்கிரமிப்பு மாகாவலி குடியேற்றம் மற்றும் சிங்கள் மயமாக்கம், பௌத்த மயமாக்கம், தமிழ் மொழி உரி உரிமை புறக்கணிப்பு, இளவாத அச்சுறுத்தல்கள் ஆகியன தொடர்ந்த வண்ணம் உள்ளன.இந்த அடக்குமுறைகள் அனைத்தையும் வைத்துக்கொண்டு "இன மத பேதமின்மை" குறித்து அரசு கதைப்பது நேர்மையின்மையாகும். வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் எழுபது ஆண்டுகளுக்கு மேலாக முன்வைத்து வரும் சமஷ்டி முறையிலான அரசியல் அதிகாரப் பகிர்வுக்கான கோரிக்கையை "இன மத பேதமின்மை" எனும் கோஷத்தின் பின்னால் மறைக்கவோ மறுதலிக்கவோ முடியாது.மேலும், 2015ஆம் ஆண்டு, ஐநா, மனித உரிமைகள் பேரவையின் திர்மானம் 30/1 இல் இலங்கை அரசு இணைப் பங்காளராக இருந்து கையொப்பம் இட்டுள்ளது. இத்தீர்மானத்தின் ஏற்பாடு 20 ஆனது அரசியல் அதிகாரப் பரவலுக்கான இலங்கையின் கடப்பாட்டை கூறுகிறது.ஆகவே. இவைாதத்தில் சர்ந்திருந்த பழைய அரசுகளைப் போல் இல்லாது தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது, நிலையானதும் கௌரவமானதும் உரிமைகளுடன் கூடிய சமஷ்டி முறையிலான அரசியல் அதிகாரப் பகிர்வை உறுதிப்படுத்தும் தீர்வுத் திட்டத்தை உடன் முன்னெடுக்கக் கோருகிறோம்.சமஷ்டி அரசியல் தீர்வு என்பது நாட்டைப் பிரிப்பது அல்ல. அது மிகவும் உயரிய ஜனநாயக அரசியல் அமைப்பின் வெளிப்பாடாகும். போருக்குப் பின் ஜனநாயக அரசியலை முன்னெடுத்துவரும் நாடுகள், எமது அண்டை நாடான நேபாளம் அடங்கலாக, சமஷ்டி முறைமையையே பொருத்தமானதாக ஏற்று அமுல்படுத்துகின்றன.எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட இன அடக்குமுறையையும் முப்பது வருடகால இன அழிப்பு யுத்தத்தையும் எதிர்கொண்ட இலங்கையின் வடக்கு கிழக்கு மக்களுக்கு பொருத்தமான அதிகாரப் பகிர்வு இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வாகும். இதுவே வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் திடமான அரசியல் அபிலாசையாகும் என்று அவர்களின் மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.