• Jul 18 2025

தெஹிவளையில் பட்டப்பகலில் நபரொருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு

Chithra / Jul 18th 2025, 12:27 pm
image


தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் ஒருவரை குறிவைத்து இன்று முற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. 

மோட்டார் சைக்களில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுச் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

45 வயதான நபரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில், சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

தெஹிவளையில் பட்டப்பகலில் நபரொருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் ஒருவரை குறிவைத்து இன்று முற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்களில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுச் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 45 வயதான நபரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில், சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement