• Jul 18 2025

காலாவதியான விசாவுடன் இணைய சூதாட்டத்தில் ஈடுபட்ட 21 இந்தியர்கள் கைது

Chithra / Jul 18th 2025, 7:39 pm
image

 

சுற்றுலா விசாக்களில் இலங்கைக்கு வந்து, அவை காலாவதியான பிறகும் கிருலப்பனை பகுதியில் தங்கியிருந்த 21 இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் இணையம் மூலம் சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும்  பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் அனைவரும் இன்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள விசாரணை பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட அனைத்து இந்திய பிரஜைகளும் 22 - 36 வயதிற்குட்பட்டவர்கள் ஆவர்.

இடர் மதிப்பீட்டுப் பிரிவு சார்ந்த அதிகாரிகள், தங்கள் வசமுள்ள தரவுகளை பகுப்பாய்வு செய்த பின்னர், இந்த இந்திய பிரஜைகள் சட்டவிரோத இணைய சூதாட்ட நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை கண்டறியப்பட்டது.

அவர்களை உடனடியாக இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்காக வெலிசரவில் உள்ள தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்க, குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

காலாவதியான விசாவுடன் இணைய சூதாட்டத்தில் ஈடுபட்ட 21 இந்தியர்கள் கைது  சுற்றுலா விசாக்களில் இலங்கைக்கு வந்து, அவை காலாவதியான பிறகும் கிருலப்பனை பகுதியில் தங்கியிருந்த 21 இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்கள் இணையம் மூலம் சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும்  பொலிஸார் தெரிவித்தனர்.இவர்கள் அனைவரும் இன்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள விசாரணை பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட அனைத்து இந்திய பிரஜைகளும் 22 - 36 வயதிற்குட்பட்டவர்கள் ஆவர்.இடர் மதிப்பீட்டுப் பிரிவு சார்ந்த அதிகாரிகள், தங்கள் வசமுள்ள தரவுகளை பகுப்பாய்வு செய்த பின்னர், இந்த இந்திய பிரஜைகள் சட்டவிரோத இணைய சூதாட்ட நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை கண்டறியப்பட்டது.அவர்களை உடனடியாக இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்காக வெலிசரவில் உள்ள தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்க, குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement