• Jul 10 2025

தமிழில் கதைத்தால் நக்கலடிப்பீர்களா? சபையில் சீறிப்பாய்ந்த அமைச்சர் சந்திரசேகர்

Chithra / Jul 9th 2025, 3:35 pm
image

 

தமிழ் மொழியை கொச்சைப்படுத்தும் வகையில் எதிரணி செயற்படுவது கவலையளிக்கின்றது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி எழுப்பியிருந்த கேள்விகளுக்கு அமைச்சர் தமிழ் மொழியில் பதிலளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் மேலும் கூறியவை வருமாறு,

'எனது தாய் மொழி தமிழ். அந்த மொழியிலேயே நான் பதிலளித்தேன். கேட்கப்பட்ட கேள்விக்கு - தெளிவாக விளக்கமளித்தேன். ஆனால் எதிரணியில் உள்ளவர்கள் தமிழ் மொழியை பார்த்து எள்ளி நகையாடுகின்றனர். தமிழ் மொழியை கொச்சப்படுத்துகின்றவர்களாக மாறியுள்ளனர்.

நானும் இந்த நாடாளுமன்றத்தில் பல வருடங்கள் இருந்துள்ளேன். ஒருவரின் சிரிப்பு மற்றும் நக்கலை பார்க்கும்போது அவர்கள் என்ன கூற வருகின்றார்கள் என்பது தெரியும்.

தமிழ் மொழியில் பதிலளிக்கும்போது அந்த மொழியை கொச்சைப்படுத்தும் எதிரணி இருப்பது கவலைக்குரிய விடயமாகும்." - என்றார்.

தமிழில் கதைத்தால் நக்கலடிப்பீர்களா சபையில் சீறிப்பாய்ந்த அமைச்சர் சந்திரசேகர்  தமிழ் மொழியை கொச்சைப்படுத்தும் வகையில் எதிரணி செயற்படுவது கவலையளிக்கின்றது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.நாடாளுமன்றத்தில் இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி எழுப்பியிருந்த கேள்விகளுக்கு அமைச்சர் தமிழ் மொழியில் பதிலளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.அமைச்சர் மேலும் கூறியவை வருமாறு,'எனது தாய் மொழி தமிழ். அந்த மொழியிலேயே நான் பதிலளித்தேன். கேட்கப்பட்ட கேள்விக்கு - தெளிவாக விளக்கமளித்தேன். ஆனால் எதிரணியில் உள்ளவர்கள் தமிழ் மொழியை பார்த்து எள்ளி நகையாடுகின்றனர். தமிழ் மொழியை கொச்சப்படுத்துகின்றவர்களாக மாறியுள்ளனர்.நானும் இந்த நாடாளுமன்றத்தில் பல வருடங்கள் இருந்துள்ளேன். ஒருவரின் சிரிப்பு மற்றும் நக்கலை பார்க்கும்போது அவர்கள் என்ன கூற வருகின்றார்கள் என்பது தெரியும்.தமிழ் மொழியில் பதிலளிக்கும்போது அந்த மொழியை கொச்சைப்படுத்தும் எதிரணி இருப்பது கவலைக்குரிய விடயமாகும்." - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement