• Jul 09 2025

ஜனாதிபதி ஊடகப்பிரிவின் அங்கத்தவர்களின் பெயர் விபரங்கள் தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு

Chithra / Jul 9th 2025, 3:31 pm
image


ஜனாதிபதி ஊடகப்பிரிவின் அங்கத்தவர்களின் பெயர் விபரங்கள் வெளியிட முடியாது என்பது தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். 

அரச தகவல் திணைக்களத்தில் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

ஜனாதிபதி ஊடகப்பிரிவின் அங்கத்தவர்களின் பெயர் விபரங்கள் வெளியிட  முடியாது என்று விடுக்கப்பட்டுள்ளமைக்கான காரணங்கள் தொடர்பில் நான் அறிந்திருக்கவில்லை. அந்த விடயம் அமைச்சரவையுடன் தொடர்புபட்டதல்ல. 

எவ்வாறாயினும் தகவல் அறியும் சட்டத்தினை பலப்படுத்தி தகவல்களை வெளியிடுவதையே நாம் இலக்காக கொண்டுள்ளோம். 

ஜனாதிபதி ஊடகப்பிரிவு அங்கத்தவர்களின் விபரங்கள் வெளியிட முடியாது என்று வெளிடப்பட்டுள்ளமைக்கு குறித்த தகவல் வழங்கும் அதிகாரி காரணங்களை குறிப்பிட்டிருப்பார். 

ஆகவே அக்காரணங்களின் அடிப்படையில் அடுத்தக்கட்டமாக ஆராய்ந்து பார்க்க வேண்டியுள்ளது. 

அத்துடன் அத்தகவல்களை பெற்றுக்கொள்லவதற்குத் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மேலதிக ஏற்பாடுகளும் உள்ளன. 

அதேநேரம்இ தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் தவிசாளர் பதவி வெற்றிடமாகவுள்ளது. அந்தப் பதவி வெற்றிடம் விரைவில் நிரப்பப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடும் கூட என தெரிவித்தார். 

ஜனாதிபதி ஊடகப்பிரிவின் அங்கத்தவர்களின் பெயர் விபரங்கள் தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு ஜனாதிபதி ஊடகப்பிரிவின் அங்கத்தவர்களின் பெயர் விபரங்கள் வெளியிட முடியாது என்பது தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரச தகவல் திணைக்களத்தில் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஜனாதிபதி ஊடகப்பிரிவின் அங்கத்தவர்களின் பெயர் விபரங்கள் வெளியிட  முடியாது என்று விடுக்கப்பட்டுள்ளமைக்கான காரணங்கள் தொடர்பில் நான் அறிந்திருக்கவில்லை. அந்த விடயம் அமைச்சரவையுடன் தொடர்புபட்டதல்ல. எவ்வாறாயினும் தகவல் அறியும் சட்டத்தினை பலப்படுத்தி தகவல்களை வெளியிடுவதையே நாம் இலக்காக கொண்டுள்ளோம். ஜனாதிபதி ஊடகப்பிரிவு அங்கத்தவர்களின் விபரங்கள் வெளியிட முடியாது என்று வெளிடப்பட்டுள்ளமைக்கு குறித்த தகவல் வழங்கும் அதிகாரி காரணங்களை குறிப்பிட்டிருப்பார். ஆகவே அக்காரணங்களின் அடிப்படையில் அடுத்தக்கட்டமாக ஆராய்ந்து பார்க்க வேண்டியுள்ளது. அத்துடன் அத்தகவல்களை பெற்றுக்கொள்லவதற்குத் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மேலதிக ஏற்பாடுகளும் உள்ளன. அதேநேரம்இ தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் தவிசாளர் பதவி வெற்றிடமாகவுள்ளது. அந்தப் பதவி வெற்றிடம் விரைவில் நிரப்பப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடும் கூட என தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement