• Aug 16 2025

சரியான நேரத்தில் அருள் பெற்றேன்- நல்லூரானை தரிசித்த பிரபல பாடகர் மனோ!

shanuja / Aug 15th 2025, 10:27 pm
image

யாழை வந்தடைந்த தென்னிந்திய பிரபல பாடகர் மனோ  நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்றுள்ளார்.  


யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவர் இன்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார். 


பலாலி விமான நிலையம் ஊடாக வந்திறங்கிய பாடகருக்கு பலத்த வரவேற்பும் மரியாதையும் வழங்கப்பட்டது.


இந்த நிலையில் பாடகர் மனோ நல்லூர்க் கந்தனைக் காண ஆலயத்திற்கு இன்று மாலை சென்றுள்ளார். 


பொலிஸ் பாதுகாப்புடன் ஆலயத்தை சென்றடைந்த அவர்  தரிசனங்களை சிறப்பாக மேற்கொண்டார். 


தரிசனங்களின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பாடகர் மனோ, சரியான நேரத்தில் வந்து முருகனின் அருளைப் பெற்றேன். மிக்க மகிழ்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

சரியான நேரத்தில் அருள் பெற்றேன்- நல்லூரானை தரிசித்த பிரபல பாடகர் மனோ யாழை வந்தடைந்த தென்னிந்திய பிரபல பாடகர் மனோ  நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்றுள்ளார்.  யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவர் இன்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார். பலாலி விமான நிலையம் ஊடாக வந்திறங்கிய பாடகருக்கு பலத்த வரவேற்பும் மரியாதையும் வழங்கப்பட்டது.இந்த நிலையில் பாடகர் மனோ நல்லூர்க் கந்தனைக் காண ஆலயத்திற்கு இன்று மாலை சென்றுள்ளார். பொலிஸ் பாதுகாப்புடன் ஆலயத்தை சென்றடைந்த அவர்  தரிசனங்களை சிறப்பாக மேற்கொண்டார். தரிசனங்களின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பாடகர் மனோ, சரியான நேரத்தில் வந்து முருகனின் அருளைப் பெற்றேன். மிக்க மகிழ்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement