• Aug 16 2025

சம்மாந்துறையில் கைக்குண்டு மீட்பு - செயலிழக்கச் செய்ய நடவடிக்கை

Thansita / Aug 16th 2025, 12:28 pm
image

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தை பகுதியில் வெடிக்காத நிலையில் புதிய கைக்குண்டு ஒன்றினை சிறுவர்கள்  கண்டுபிடித்துள்ளனர்.

இச்சம்பவம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தை பகுதியில் உள்ள அம்பாறை - கல்முனை பிரதான வீதிக்கு அருகில் உள்ள குட்டை ஒன்றில் இன்று  முற்பகல் மீட்கப்பட்டுள்ளது.

தற்போது   மீட்கப்பட்ட   கைக்குண்டை செயலிழக்கச் செய்ய  விசேட அதிரடி படையினரால்  நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 அத்துடன் குறித்த  குண்டை கண்டுபிடித்தவர்கள் 119 எனும் பொலிஸ் அவசர பிரிவுக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சம்மாந்துறை பொலிஸார் கைக்குண்டுடை பார்வையிட்டனர்

மீட்கப்பட்ட கைக்குண்டை அவ்விடத்தில் இருந்து அகற்றி செயலிழக்கம் செய்வதற்காக இன்று  சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற கட்டளையை பெற்று  மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

சம்மாந்துறையில் கைக்குண்டு மீட்பு - செயலிழக்கச் செய்ய நடவடிக்கை சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தை பகுதியில் வெடிக்காத நிலையில் புதிய கைக்குண்டு ஒன்றினை சிறுவர்கள்  கண்டுபிடித்துள்ளனர்.இச்சம்பவம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தை பகுதியில் உள்ள அம்பாறை - கல்முனை பிரதான வீதிக்கு அருகில் உள்ள குட்டை ஒன்றில் இன்று  முற்பகல் மீட்கப்பட்டுள்ளது.தற்போது   மீட்கப்பட்ட   கைக்குண்டை செயலிழக்கச் செய்ய  விசேட அதிரடி படையினரால்  நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த  குண்டை கண்டுபிடித்தவர்கள் 119 எனும் பொலிஸ் அவசர பிரிவுக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சம்மாந்துறை பொலிஸார் கைக்குண்டுடை பார்வையிட்டனர்மீட்கப்பட்ட கைக்குண்டை அவ்விடத்தில் இருந்து அகற்றி செயலிழக்கம் செய்வதற்காக இன்று  சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற கட்டளையை பெற்று  மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement