தந்தையொருவர் மூன்று மகள்களை வெட்டிக் கொலை செய்து தன்னுயிரையும் மாய்த்துக்கொண்ட கொடூர சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்தச் சம்பவம் நாமக்கல் ராசிபுரம் அருகே இடம்பெற்றுள்ளது. நாமக்கல் ராசிபுரம் பகுதியில் வசிக்கும் 3 பிள்ளைகளின் தந்தையான கோவிந்தராஜ் (வயது -36) என்பவரே இந்தக் கொடூரத்தை செய்துள்ளார்.
குறித்த தந்தை கடன் வாங்கி வீடு கட்டியுள்ளார். வீடு கட்ட வாங்கிய அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததால் உயிரை மாய்க்க முடிவெடுத்துள்ளார்.
தான் உயிரிழந்தால் பிள்ளைகளைப் பார்ப்பதற்கு யாருமில்லை எனக் கருதி அவரது 3 மகள்களான பிரக்திஷா ஸ்ரீ (9), ரித்திகா ஸ்ரீ (7), தேவஸ்ரீ (3) ஆகியோரை வெட்டிக்கொலை செய்துள்ளார். பின்னர் தந்தையான அவரும் விஷமருந்தி உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
மகள்களை வெட்டிக் கொலை செய்யும் அளவிற்கு தந்தையின் மனம் உள்ளதா என்றவாறான பல கேள்விகள் விமர்சனங்களாக எழுந்துள்ளன.
மூன்று மகள்களையும் வெட்டி தன்னுயிரையும் மாய்த்துள்ள தந்தையின் செயல் நாமக்கல் பகுதியையே அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
கடன் தொல்லையால் பல பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மகள்களை வெட்டிக் கொன்று தந்தையும் விஷமருந்தி உயிர்மாய்ப்பு; கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் எடுத்த விபரீதம் தந்தையொருவர் மூன்று மகள்களை வெட்டிக் கொலை செய்து தன்னுயிரையும் மாய்த்துக்கொண்ட கொடூர சம்பவம் பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம் நாமக்கல் ராசிபுரம் அருகே இடம்பெற்றுள்ளது. நாமக்கல் ராசிபுரம் பகுதியில் வசிக்கும் 3 பிள்ளைகளின் தந்தையான கோவிந்தராஜ் (வயது -36) என்பவரே இந்தக் கொடூரத்தை செய்துள்ளார். குறித்த தந்தை கடன் வாங்கி வீடு கட்டியுள்ளார். வீடு கட்ட வாங்கிய அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததால் உயிரை மாய்க்க முடிவெடுத்துள்ளார். தான் உயிரிழந்தால் பிள்ளைகளைப் பார்ப்பதற்கு யாருமில்லை எனக் கருதி அவரது 3 மகள்களான பிரக்திஷா ஸ்ரீ (9), ரித்திகா ஸ்ரீ (7), தேவஸ்ரீ (3) ஆகியோரை வெட்டிக்கொலை செய்துள்ளார். பின்னர் தந்தையான அவரும் விஷமருந்தி உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். மகள்களை வெட்டிக் கொலை செய்யும் அளவிற்கு தந்தையின் மனம் உள்ளதா என்றவாறான பல கேள்விகள் விமர்சனங்களாக எழுந்துள்ளன. மூன்று மகள்களையும் வெட்டி தன்னுயிரையும் மாய்த்துள்ள தந்தையின் செயல் நாமக்கல் பகுதியையே அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. கடன் தொல்லையால் பல பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.