தமிழகத்தின் சென்னையில் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
சென்னையில் குழந்தைகளை கடத்தி பல லட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக சமீபத்தில் ஒலிப்பதிவு ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
அந்த ஒலிப்பதிவில் குழந்தைகள் விற்பனை தொடர்பான உரையாடல் ஒன்று வெளியானது.
ஒலிப்பதிவை ஆதரமாக கொண்டு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சென்னை மற்றும் புறநகர் பகுதியில் குழந்தைகளை கடத்தி குழந்தையில்லாத தம்பதியினருக்கு 10 லட்சம் தொடக்கம் 15 லட்சம் ரூபா வரை விற்பனை செய்தமை தெரியவந்துள்ளது.
அதனைத் தொடர்ந்தும் குறித்த பெண்ணால் கடத்தப்பட்ட 2 குழந்தைகளும், பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
10 லட்சம் - 15 லட்சம் ரூபாவிற்கு கடத்தி விற்கப்பட்ட குழந்தைகள் தமிழகத்தின் சென்னையில் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. சென்னையில் குழந்தைகளை கடத்தி பல லட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக சமீபத்தில் ஒலிப்பதிவு ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த ஒலிப்பதிவில் குழந்தைகள் விற்பனை தொடர்பான உரையாடல் ஒன்று வெளியானது. ஒலிப்பதிவை ஆதரமாக கொண்டு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்ட பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சென்னை மற்றும் புறநகர் பகுதியில் குழந்தைகளை கடத்தி குழந்தையில்லாத தம்பதியினருக்கு 10 லட்சம் தொடக்கம் 15 லட்சம் ரூபா வரை விற்பனை செய்தமை தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்தும் குறித்த பெண்ணால் கடத்தப்பட்ட 2 குழந்தைகளும், பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.