• Jul 27 2025

தமிழக முதல்வர், நடிகர் விஜயின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்; சென்னையில் பரபரப்பு

Thansita / Jul 27th 2025, 11:49 am
image

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இன்று அதிகாலை சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் வீதியில்  உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து  சிறிது நேரத்தின்பின் சென்னை ஈசிஆர் நீலாங்கரையில் உள்ள நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயின் வீட்டிற்கும் வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இரு வீடுகளுக்கும் இன்று அதிகாலை காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்ட மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார். 

முதல்வரின் வீட்டில் காவல் துறையினர், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்தனர்.  ஆனால், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்துள்ளது. 

இதேவேளை இன்று அதிகாலை சுமார் 5:30 மணியளவில் வெடிகுண்டு வைத்திருப்பதாக நடிகர் விஜயின் வீட்டு கட்டுபாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர். 

இது குறித்து தகவல் அறிந்த சென்னை வெடிகுண்டு நிபுணர்கள் ஈசிஆர் நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டுக்கு சென்று சுமார் ஒரு மணி நேரம் முழுமையாக சோதனை செய்த பிறகு அது புரளி என தெரியவந்தது. 

மேலும், காவல் கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்கள் குறித்து  பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழக முதல்வர், நடிகர் விஜயின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்; சென்னையில் பரபரப்பு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று அதிகாலை சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் வீதியில்  உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து  சிறிது நேரத்தின்பின் சென்னை ஈசிஆர் நீலாங்கரையில் உள்ள நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயின் வீட்டிற்கும் வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இரு வீடுகளுக்கும் இன்று அதிகாலை காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்ட மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார். முதல்வரின் வீட்டில் காவல் துறையினர், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்தனர்.  ஆனால், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்துள்ளது. இதேவேளை இன்று அதிகாலை சுமார் 5:30 மணியளவில் வெடிகுண்டு வைத்திருப்பதாக நடிகர் விஜயின் வீட்டு கட்டுபாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த சென்னை வெடிகுண்டு நிபுணர்கள் ஈசிஆர் நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டுக்கு சென்று சுமார் ஒரு மணி நேரம் முழுமையாக சோதனை செய்த பிறகு அது புரளி என தெரியவந்தது. மேலும், காவல் கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்கள் குறித்து  பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement