• Jul 26 2025

இந்தியாவில் இடிந்து வீழ்ந்த பாடசாலை கட்டிடம்: 4 மாணவர்கள் பலி! மீட்கும் பணி தீவிரம்

Chithra / Jul 25th 2025, 12:05 pm
image

இந்தியாவின்  ராஜஸ்தானில் பாடசாலை கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் நான்கு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். 

இந்த விபத்தில் 17 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.   

ராஜஸ்தானின் - ஜலாவர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரச பாடசாலையில் இன்று (25) காலை இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

ஒற்றை மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


பாடசாலை வளாகத்தில் இருந்த 27 மாணவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியாவில் இடிந்து வீழ்ந்த பாடசாலை கட்டிடம்: 4 மாணவர்கள் பலி மீட்கும் பணி தீவிரம் இந்தியாவின்  ராஜஸ்தானில் பாடசாலை கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் நான்கு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 17 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.   ராஜஸ்தானின் - ஜலாவர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரச பாடசாலையில் இன்று (25) காலை இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.ஒற்றை மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பாடசாலை வளாகத்தில் இருந்த 27 மாணவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Advertisement

Advertisement

Advertisement