இந்துக்களின் புனித தினமான ஆடி அமாவாசை நேற்று வியாழக்கிழமை (24) உலகமெங்கும் பரந்து வாழும் இந்துக்களால் அனுஷ்டிக்கப்பட்டது.
ஆடி அமாவாசை தினத்தன்று இந்துக்கள், நீர்நிலைகளில் புனித நீராடி, முன்னோர்களுக்கு எள் மற்றும் அரிசி மாவால் செய்யப்பட்ட பிண்டங்களை வைத்து தர்ப்பணம் கொடுப்பது மரபு. அத்துடன் முன்னோர்களின் ஆசிகளைப் பெற்று குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும் என்பது ஐதீகம்.
அந்த வகையில், உலகெங்கிலுமுள்ள உள்ள பல்வேறு புனித நீர் நிலைகளில் மூத்தோர்களை வணங்கி, அவர்களது ஆத்ம சாந்திக்காக பிரார்த்தித்து, நேற்று இந்து மக்கள் பிதிர் தர்ப்பணம் செய்தனர்.
அதனடிப்படையில் கனடா ஒன்ராரியோ பூங்காவிலுள்ள ஷிப்பால்ட் பொயின்ட் கடற்கரையில், நூற்றுக்கணக்கான இந்துக்கள் ஒன்றுகூடி புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடுகளை மேற்கொண்டனர்.
ஆடி அமாவாசை தினத்தன்று கனடா ஷிப்பால்ட் பொயின்ட் கடற்கரையில் ஒன்றுகூடிய நூற்றுக்கணக்கான தமிழர்கள் இந்துக்களின் புனித தினமான ஆடி அமாவாசை நேற்று வியாழக்கிழமை (24) உலகமெங்கும் பரந்து வாழும் இந்துக்களால் அனுஷ்டிக்கப்பட்டது.ஆடி அமாவாசை தினத்தன்று இந்துக்கள், நீர்நிலைகளில் புனித நீராடி, முன்னோர்களுக்கு எள் மற்றும் அரிசி மாவால் செய்யப்பட்ட பிண்டங்களை வைத்து தர்ப்பணம் கொடுப்பது மரபு. அத்துடன் முன்னோர்களின் ஆசிகளைப் பெற்று குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும் என்பது ஐதீகம். அந்த வகையில், உலகெங்கிலுமுள்ள உள்ள பல்வேறு புனித நீர் நிலைகளில் மூத்தோர்களை வணங்கி, அவர்களது ஆத்ம சாந்திக்காக பிரார்த்தித்து, நேற்று இந்து மக்கள் பிதிர் தர்ப்பணம் செய்தனர். அதனடிப்படையில் கனடா ஒன்ராரியோ பூங்காவிலுள்ள ஷிப்பால்ட் பொயின்ட் கடற்கரையில், நூற்றுக்கணக்கான இந்துக்கள் ஒன்றுகூடி புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடுகளை மேற்கொண்டனர்.