• Jul 27 2025

தாயுடன் நிகழ்வுக்கு சென்ற :சிறுமி சடலமாக மிதப்பு- கொட்டகலையில் சோகம்!

Thansita / Jul 27th 2025, 10:59 am
image

கொட்டகலையைச் சேர்ந்த 4 வயது சிறுமி, தாயுடன் பூப்புனித நீராட்டுவிழா நிகழ்விற்கு செல்லும் போது ஆற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கொட்டகலை ரொசிட்டா தோட்டத்தைச் சேர்ந்த  சிறுமியே  இவ்வாறு நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்

இத்துயரச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் 

கொட்டகலை ரொசிட்டா தோட்டத்தைச் சேர்ந்த இந்த சிறுமி, நீராட்டுவிழா விழாவிற்கு செல்லும் போது  ஆற்றைக்கடந்து பிரதான வீதிக்கு வரும் சிறிய பாலத்தில் நடந்து செல்லும் போதே தவறி விழுந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிறுமியின் சடலம் தற்போது கொட்டகலை மாவட்ட வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தாயுடன் நிகழ்வுக்கு சென்ற :சிறுமி சடலமாக மிதப்பு- கொட்டகலையில் சோகம் கொட்டகலையைச் சேர்ந்த 4 வயது சிறுமி, தாயுடன் பூப்புனித நீராட்டுவிழா நிகழ்விற்கு செல்லும் போது ஆற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.கொட்டகலை ரொசிட்டா தோட்டத்தைச் சேர்ந்த  சிறுமியே  இவ்வாறு நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்இத்துயரச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் கொட்டகலை ரொசிட்டா தோட்டத்தைச் சேர்ந்த இந்த சிறுமி, நீராட்டுவிழா விழாவிற்கு செல்லும் போது  ஆற்றைக்கடந்து பிரதான வீதிக்கு வரும் சிறிய பாலத்தில் நடந்து செல்லும் போதே தவறி விழுந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.சிறுமியின் சடலம் தற்போது கொட்டகலை மாவட்ட வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement