ரஷ்யாவில் விழுந்து நொருங்கிய விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ரஷ்யாவில் இருந்து 48 பேருடன் பயணித்த ஏஎன்-24 என்ற பயணிகள் விமானம் காட்டு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதுடன் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏஎன்-24 ரக விமானம் அமுர் பகுதியில் உள்ள டின்டா நகரிலிருந்து புறப்பட்டு சில மணிநேரத்தில் விமானக் கட்டுப்பாட்டு நிலையத்துடன் தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது. இதனால் விமானம் மாயமாகியுள்ள தகவலை அறிந்து தேடும் பணிகள் இடம்பெற்றன.
அதனடிப்படையில் விமானம் 15 கிலோமீட்டர் தொலைவில் விழுந்து விபத்துக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த விமானத்தில் 48 பேர் பயணித்துள்ளதுடன் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.உலங்குவாநூர்தியின் உதவியுடன் தேடுதல் மேற்கொண்டு விமானம் விபத்திற்குள்ளான சம்பவங்களை இனங்கண்டனர்.
இந்த நிலையில் விபத்துக்குள்ளான ரஷ்ய விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விமானத்தின் கறுப்புப் பெட்டியில் உள்ள தகவல்களை ஆராய்வதற்கு , கறுப்புப் பெட்டி மொஸ்கோவுக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் விழுந்து நொருங்கிய விமானம்; கறுப்புப்பெட்டி மீட்பு - விசாரணைகள் தீவிரம் ரஷ்யாவில் விழுந்து நொருங்கிய விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ரஷ்யாவில் இருந்து 48 பேருடன் பயணித்த ஏஎன்-24 என்ற பயணிகள் விமானம் காட்டு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதுடன் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏஎன்-24 ரக விமானம் அமுர் பகுதியில் உள்ள டின்டா நகரிலிருந்து புறப்பட்டு சில மணிநேரத்தில் விமானக் கட்டுப்பாட்டு நிலையத்துடன் தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது. இதனால் விமானம் மாயமாகியுள்ள தகவலை அறிந்து தேடும் பணிகள் இடம்பெற்றன. அதனடிப்படையில் விமானம் 15 கிலோமீட்டர் தொலைவில் விழுந்து விபத்துக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டது. இந்த விமானத்தில் 48 பேர் பயணித்துள்ளதுடன் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.உலங்குவாநூர்தியின் உதவியுடன் தேடுதல் மேற்கொண்டு விமானம் விபத்திற்குள்ளான சம்பவங்களை இனங்கண்டனர். இந்த நிலையில் விபத்துக்குள்ளான ரஷ்ய விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.விமானத்தின் கறுப்புப் பெட்டியில் உள்ள தகவல்களை ஆராய்வதற்கு , கறுப்புப் பெட்டி மொஸ்கோவுக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.