• Jul 26 2025

வெள்ளத்தில் சிக்கிய 35 மாணவர்கள்; பாலம் போல் குனிந்து காப்பாற்றிய இளைஞர்கள்!

shanuja / Jul 25th 2025, 1:36 pm
image

பாடசாலை சென்று திரும்பிய மாணவர்கள் பலர் வெள்ளத்தில் சிக்கிய நிலையில் அவர்களை பாலம் போல் குனிந்து முதுகில் சுமந்து காப்பாற்றிய இளைஞர்களின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது. 


இந்த நெகிழ்ச்சிச் சம்பவம் தமிழகத்தின் பஞ்சாப் மாநிலத்தில் பதிவாகியுள்ளது. 


பஞ்சாப் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 


இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தின் மோகாவில் மல்லேயன் பகுதிகள் பல வெள்ளத்தில் மூழ்கியது. அதனையடுத்து பாடசாலைகளுக்கு திடீரென விடுமுறை அறிவிக்கப்பட்டது. 


விடுமுறையால் பாடசாலையிலிருந்து வீடு திரும்பிய 35 மாணவர்கள் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டனர். மாணவர்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டதையறிந்த இளைஞர்கள் இருவர் துரிதமாக செயற்பட்டு மாணவர்களைக் காப்பாற்றியுள்ளனர். 


பாடசாலையில் இருந்து  ஒரு முனையில் இருந்து மறுமுனைக்கு மாணவர்கள் செல்ல வேண்டிய பாதை வெள்ளத்தால் மூழ்கியுள்ளதால் குறித்த இளைஞர்கள் இருவரும் பாலங்கள் போல் குனிந்து மாணவர்களு்கு பாதை அமைத்து கொடுத்தனர். 


அதன்பின்னர் மாணவர்கள் அனைவரும் இளைஞர்கள் மீது ஏறி மற்றொரு முனைக்கு பாதுகாப்பாக வந்தனர். இதுதொடர்பான

 காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


இதனை தொடர்ந்து குழந்தைகளை மீட்க உதவிய இளைஞர்களுக்கு மல்லேயன் கிராம மக்கள் நன்றி தெரிவித்து கௌரவிப்பு வழங்கினர். சுயநலமிக்க நவீன காலத்தில் இவ்வாறான மனிதநேயப் பண்புகள் இளைஞர்களிடத்தே வெளிவருவது தொடர்பில் மக்கள் நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வெள்ளத்தில் சிக்கிய 35 மாணவர்கள்; பாலம் போல் குனிந்து காப்பாற்றிய இளைஞர்கள் பாடசாலை சென்று திரும்பிய மாணவர்கள் பலர் வெள்ளத்தில் சிக்கிய நிலையில் அவர்களை பாலம் போல் குனிந்து முதுகில் சுமந்து காப்பாற்றிய இளைஞர்களின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த நெகிழ்ச்சிச் சம்பவம் தமிழகத்தின் பஞ்சாப் மாநிலத்தில் பதிவாகியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தின் மோகாவில் மல்லேயன் பகுதிகள் பல வெள்ளத்தில் மூழ்கியது. அதனையடுத்து பாடசாலைகளுக்கு திடீரென விடுமுறை அறிவிக்கப்பட்டது. விடுமுறையால் பாடசாலையிலிருந்து வீடு திரும்பிய 35 மாணவர்கள் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டனர். மாணவர்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டதையறிந்த இளைஞர்கள் இருவர் துரிதமாக செயற்பட்டு மாணவர்களைக் காப்பாற்றியுள்ளனர். பாடசாலையில் இருந்து  ஒரு முனையில் இருந்து மறுமுனைக்கு மாணவர்கள் செல்ல வேண்டிய பாதை வெள்ளத்தால் மூழ்கியுள்ளதால் குறித்த இளைஞர்கள் இருவரும் பாலங்கள் போல் குனிந்து மாணவர்களு்கு பாதை அமைத்து கொடுத்தனர். அதன்பின்னர் மாணவர்கள் அனைவரும் இளைஞர்கள் மீது ஏறி மற்றொரு முனைக்கு பாதுகாப்பாக வந்தனர். இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.இதனை தொடர்ந்து குழந்தைகளை மீட்க உதவிய இளைஞர்களுக்கு மல்லேயன் கிராம மக்கள் நன்றி தெரிவித்து கௌரவிப்பு வழங்கினர். சுயநலமிக்க நவீன காலத்தில் இவ்வாறான மனிதநேயப் பண்புகள் இளைஞர்களிடத்தே வெளிவருவது தொடர்பில் மக்கள் நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement