• Sep 10 2025

பான்ஸி பொருட்கள் விற்பனை நிலையத்தில் திருடப்பட்ட CCTV கேமரா; யாழில் சம்பவம்

Chithra / Sep 9th 2025, 12:03 pm
image


யாழ்ப்பாணம் -  வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி தெற்கு பகுதியில் உள்ள பான்ஸி பொருட்கள் விற்பனை நிலையத்தில் உள்ள கேமரா ஒன்று நேற்றிரவு களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்றிரவு மது போதையில் வந்த ஒருவர் மோட்டார் சைக்கிள் திருத்தும் நிலையத்தில் இருந்த கேமராவை முறித்து சேதப்படுத்தியதுடன் அருகில் இருந்த பான்ஸி பொருட்கள் விற்பனை நிலையத்தில் இருந்த கேமாராவை திருடிச் சென்றுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை தமது வர்த்தக ஸ்தாபனத்துக்கு வந்த உரிமையாளர்கள்,  கேமரா சேதப்படுத்தப்பட்டு இருந்தததையும், களவாடப்பட்டு இருந்ததையும் அவதானித்தனர்.

கடையில் உள்ள பொருட்களை திருடுவதற்கு முயற்சித்தவேளை வீதியில் ஆட்கள் நடமாட்டம் இருந்ததால் குறித்த சந்தேகநபர் தப்பித்து சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வர்த்தக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.


பான்ஸி பொருட்கள் விற்பனை நிலையத்தில் திருடப்பட்ட CCTV கேமரா; யாழில் சம்பவம் யாழ்ப்பாணம் -  வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி தெற்கு பகுதியில் உள்ள பான்ஸி பொருட்கள் விற்பனை நிலையத்தில் உள்ள கேமரா ஒன்று நேற்றிரவு களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இது குறித்து மேலும் தெரியவருகையில்,நேற்றிரவு மது போதையில் வந்த ஒருவர் மோட்டார் சைக்கிள் திருத்தும் நிலையத்தில் இருந்த கேமராவை முறித்து சேதப்படுத்தியதுடன் அருகில் இருந்த பான்ஸி பொருட்கள் விற்பனை நிலையத்தில் இருந்த கேமாராவை திருடிச் சென்றுள்ளார்.இந்நிலையில் இன்று காலை தமது வர்த்தக ஸ்தாபனத்துக்கு வந்த உரிமையாளர்கள்,  கேமரா சேதப்படுத்தப்பட்டு இருந்தததையும், களவாடப்பட்டு இருந்ததையும் அவதானித்தனர்.கடையில் உள்ள பொருட்களை திருடுவதற்கு முயற்சித்தவேளை வீதியில் ஆட்கள் நடமாட்டம் இருந்ததால் குறித்த சந்தேகநபர் தப்பித்து சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வர்த்தக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement