பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் விடயதானத்துக்குரிய புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கும், தற்போதுள்ள சில சட்டங்களை திருத்தம் செய்வதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.
அதற்கமைய, பெருந்தோட்ட முகாமைத்துவ சட்டம் என்ற புதிய சட்டமும்,
துருசவிய நிதியத்தின் அதிகாரங்களை இறப்பர் அபிவிருத்தி திணைக்களத்திடம் ஒப்படைப்பதற்கான புதிய சட்டமும் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
தேயிலை, இறப்பர் மற்றும் தென்னந்தோட்டங்கள் கட்டுப்பாட்டு சட்டம், சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்ற சட்டம்,
தேயிலைச் சக்தி நிதியச் சட்டம் உள்ளிட்ட சில சட்டங்களில் திருத்தம் மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
சில சட்டங்களை திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் விடயதானத்துக்குரிய புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கும், தற்போதுள்ள சில சட்டங்களை திருத்தம் செய்வதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.அதற்கமைய, பெருந்தோட்ட முகாமைத்துவ சட்டம் என்ற புதிய சட்டமும், துருசவிய நிதியத்தின் அதிகாரங்களை இறப்பர் அபிவிருத்தி திணைக்களத்திடம் ஒப்படைப்பதற்கான புதிய சட்டமும் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. தேயிலை, இறப்பர் மற்றும் தென்னந்தோட்டங்கள் கட்டுப்பாட்டு சட்டம், சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்ற சட்டம், தேயிலைச் சக்தி நிதியச் சட்டம் உள்ளிட்ட சில சட்டங்களில் திருத்தம் மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.