• Sep 08 2025

ஆபத்தான முறையில் பேருந்துகளை செலுத்திய சாரதிகள் கைது!

shanuja / Sep 7th 2025, 6:25 pm
image

ஆபத்தான முறையில் பேருந்துகளை செலுத்திய சாரதிகள் கைது!

 


 

தனியார் பேருந்துகளை அதிவேகமாக ஓட்டிச் சென்ற சாரதிகள் இருவரை ஹட்டன் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு நேற்று (06) இரவு   கைது செய்துள்ளது. 

 


இரு பேருந்துகளும் கண்டி பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு சந்தர்ப்பங்களில் தங்கள் பயணத்தைத் ஆரம்பித்தன. 


கினிகத்தேனை பகுதியில் பேருந்துகளின் பின்னால் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர், இரு பேருந்துகளின் சாரதிகளும் ஆபத்தான முறையில் பேருந்துகளை அதிவேகமாக ஓட்டிச் செல்வதை தனது கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்து, ஹட்டன் பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்துள்ளார். 


இதனையடுத்து உடனடியாகச் செயற்பட்ட பொலிஸார், இரு பேருந்துகளையும் செலுத்திய சாரதிகளை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர். 


கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களுக்கும் எதிராக ஆபத்தாக வாகனம் செலுத்திய  குற்றச்சாட்டில்  ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆபத்தான முறையில் பேருந்துகளை செலுத்திய சாரதிகள் கைது ஆபத்தான முறையில் பேருந்துகளை செலுத்திய சாரதிகள் கைது  தனியார் பேருந்துகளை அதிவேகமாக ஓட்டிச் சென்ற சாரதிகள் இருவரை ஹட்டன் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு நேற்று (06) இரவு   கைது செய்துள்ளது.  இரு பேருந்துகளும் கண்டி பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு சந்தர்ப்பங்களில் தங்கள் பயணத்தைத் ஆரம்பித்தன. கினிகத்தேனை பகுதியில் பேருந்துகளின் பின்னால் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர், இரு பேருந்துகளின் சாரதிகளும் ஆபத்தான முறையில் பேருந்துகளை அதிவேகமாக ஓட்டிச் செல்வதை தனது கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்து, ஹட்டன் பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்துள்ளார். இதனையடுத்து உடனடியாகச் செயற்பட்ட பொலிஸார், இரு பேருந்துகளையும் செலுத்திய சாரதிகளை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களுக்கும் எதிராக ஆபத்தாக வாகனம் செலுத்திய  குற்றச்சாட்டில்  ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement