• Sep 06 2025

எல்ல விபத்தில் உயிரிழந்தோரின் உடலங்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

Aathira / Sep 6th 2025, 9:13 am
image

எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தின் போது உயிரிழந்தோரின் உடலங்கள் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

நேற்று முதல் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, பதுளை மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவர்த்தன தெரிவித்தார்.

எல்ல-வல்லவாய பிரதான வீதியில் நடைபெற்ற பேருந்து விபத்தில், இரண்டு சிறுவர்கள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். 

மேலும் 15 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசேட விசாரணைகளை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் ஆரம்பித்துள்ளது.

 பேருந்து சாரதிகளின் கவனக்குறைவே விபத்திற்கான முதன்மை காரணமாக அமைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


எல்ல விபத்தில் உயிரிழந்தோரின் உடலங்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தின் போது உயிரிழந்தோரின் உடலங்கள் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, பதுளை மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவர்த்தன தெரிவித்தார்.எல்ல-வல்லவாய பிரதான வீதியில் நடைபெற்ற பேருந்து விபத்தில், இரண்டு சிறுவர்கள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசேட விசாரணைகளை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் ஆரம்பித்துள்ளது. பேருந்து சாரதிகளின் கவனக்குறைவே விபத்திற்கான முதன்மை காரணமாக அமைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement