• Jul 05 2025

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவருக்கு பிணை!

Chithra / Jul 3rd 2025, 1:25 pm
image


விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவரை பிணையில் விடுதலை செய்ய கம்பஹா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மேர்வின் சில்வா சமர்ப்பித்த பிணை மனு இன்று (03) கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி டபிள்யூ. கே. டி. விஜயரத்ன முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டபோதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இதன்போது, ​​மேர்வின் சில்வா, ஜயந்த கப்ரால் மற்றும் நவீன் வீரகோன் ஆகிய மூன்று பிரதிவாதிகளுக்கும் பிணை வழங்கப்பட்டது. 

குறித்த மூவரும் தலா 200,000 ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான ஐந்து சரீரப் பிணைகளிலும் விடுவிக்கப்பட்டுள்ளனர், மேலும் அவர்களுக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. 

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றுக்கு போலி ஆவணைங்களை தயாரித்து பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் பத்தரமுல்லை பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து கடந்த மார்ச் மாதம் 05ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவருக்கு பிணை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவரை பிணையில் விடுதலை செய்ய கம்பஹா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேர்வின் சில்வா சமர்ப்பித்த பிணை மனு இன்று (03) கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி டபிள்யூ. கே. டி. விஜயரத்ன முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டபோதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்போது, ​​மேர்வின் சில்வா, ஜயந்த கப்ரால் மற்றும் நவீன் வீரகோன் ஆகிய மூன்று பிரதிவாதிகளுக்கும் பிணை வழங்கப்பட்டது. குறித்த மூவரும் தலா 200,000 ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான ஐந்து சரீரப் பிணைகளிலும் விடுவிக்கப்பட்டுள்ளனர், மேலும் அவர்களுக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றுக்கு போலி ஆவணைங்களை தயாரித்து பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் பத்தரமுல்லை பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து கடந்த மார்ச் மாதம் 05ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement