டக்வொர்த் வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறையில் சிரேஸ்ட தொழில் அதிகாரி ஆவதுடன், சமீபத்தில் அமெரிக்க வர்த்தக பணிக்குழுவின் உதவி செயலாளராகவும், அவுஸ்திரேலியா-ஐரோப்பிய ஒன்றிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் துணைத் தலைமை பேச்சுவார்த்தையாளராகவும் செயற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம், 2022 முதல் இலங்கையில் அவுஸ்திரேலியாவின் நலன்களை முன்னேற்றுவதற்கு ஆற்றிய பங்களிப்புகளுக்காக பதவி விலகும் உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸூக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவுஸ்திரேலிய வௌிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் புதிய உயர்ஸ்தானிகர் நியமிப்பு இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் அடுத்த உயர்ஸ்தானிகராக மேத்யூ டக்வொர்த் (Matthew Duckworth) நியமிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய வௌிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. டக்வொர்த் வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறையில் சிரேஸ்ட தொழில் அதிகாரி ஆவதுடன், சமீபத்தில் அமெரிக்க வர்த்தக பணிக்குழுவின் உதவி செயலாளராகவும், அவுஸ்திரேலியா-ஐரோப்பிய ஒன்றிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் துணைத் தலைமை பேச்சுவார்த்தையாளராகவும் செயற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம், 2022 முதல் இலங்கையில் அவுஸ்திரேலியாவின் நலன்களை முன்னேற்றுவதற்கு ஆற்றிய பங்களிப்புகளுக்காக பதவி விலகும் உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸூக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவுஸ்திரேலிய வௌிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.