2025 ஆம் வருட உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு, நூலக, கலை, இலக்கிய மேம்பாட்டு தினத்தை முன்னிட்டு கொட்டகலை பிரதேச சபையின் நூலகப்பிரிவினால் 'அழகிய நாடு வளமான வாழ்க்கை' எனும் தொனிப்பொருளின் கீழ் சித்திர கண்காட்சி இடம்பெற்றது.
சித்திர கண்காட்சியில் தமது கலைப்படைப்புகளை முன்வைத்த பாடசாலை மாணவர்கள் மற்றும் ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரி ஆசாரிய மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கும் வைபவம் கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாந்தின் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் கொட்டகலை பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்கள், செயலாளர் அவர்கள், ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி மற்றும் விரிவுரையாளர்கள், ஆசிரிய மாணவர்கள், கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயம், கேம்பிரிஜ் கல்லூரி, வட்டகொடை தமிழ் வித்தியாலயம் மற்றும் வட்டகொடை சிங்கள வித்தியாலயம் ஆகிய பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு சித்திர கண்காட்சி 2025 ஆம் வருட உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு, நூலக, கலை, இலக்கிய மேம்பாட்டு தினத்தை முன்னிட்டு கொட்டகலை பிரதேச சபையின் நூலகப்பிரிவினால் 'அழகிய நாடு வளமான வாழ்க்கை' எனும் தொனிப்பொருளின் கீழ் சித்திர கண்காட்சி இடம்பெற்றது. சித்திர கண்காட்சியில் தமது கலைப்படைப்புகளை முன்வைத்த பாடசாலை மாணவர்கள் மற்றும் ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரி ஆசாரிய மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கும் வைபவம் கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாந்தின் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் கொட்டகலை பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்கள், செயலாளர் அவர்கள், ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி மற்றும் விரிவுரையாளர்கள், ஆசிரிய மாணவர்கள், கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயம், கேம்பிரிஜ் கல்லூரி, வட்டகொடை தமிழ் வித்தியாலயம் மற்றும் வட்டகொடை சிங்கள வித்தியாலயம் ஆகிய பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.