தமிழ் பேசும் மக்கள் மத்தியில் உள்ள அனைத்து கட்சிகளும் இலங்கையில் உள்ள அனைத்து முற்போக்கு ஜனநாயக சக்திகளும் அரசை தேர்தலை நடத்த வைக்க வேண்டும் என இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபை முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தெரிவித்தார்.
யாழில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள கட்சிகளோடு நானும் இணைந்து நடத்திய கலந்துரையாடலின் பொழுது மாகாண சபைகளுக்கான தேர்தலை உடனடியாக எந்த வகையான காரணமும் சொல்லி காலம் தாழ்த்தாமல் உடனடியாக வைக்க வேண்டும்.
அந்த கோரிக்கையை அனைத்து தமிழ் பேசுகின்ற மக்கள் மத்தியில் உள்ள கட்சிகளும் இலங்கையினுடைய அனைத்து கட்சிகளோடும் இணைந்தும் தனித்தனியாகவும் முன் வைக்க வேண்டும் என்ற அந்த இணக்கத்தோடு கலந்துரையாடல்கள் நடைபெற்றதாக நான் நினைக்கிறேன்.
தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது இலங்கை மக்கள் அனைவருடைய கோரிக்கையாக தான் பார்க்கிறேன்.
நடத்தப்பட வேண்டிய தேர்தல்களை உரிய காலத்தில் நடத்தாமல் இருப்பது அரசியல் யாப்புக்கும் விரோதமானது.
ஜனநாயகத்தை விரோதமாக்கி அதிகாரத்தில் இருக்கின்ற தேசிய மக்கள் சக்தியினர் காரணங்கள் எதையும் கூறாமல் தேர்தல்களை நடத்த வேண்டும்.
அரசியல் கட்சிகளுடைய தலைவர்களோடும் இலங்கையினுடைய பல்வேறு சமூகங்களின் உடைய அரசியல் சமூக பிரமுகர்களோடும் நான் நடத்தி வருகின்ற சந்திப்புகள் தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பதல்ல.
தேர்தல் இன்று வந்தால் தான் எப்படி ஒரு கட்சி தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்று பிரச்சினையே வரும். அந்த விடயங்களுக்குள் நான் எந்த விதமான அக்கறையும் செலுத்துவதற்கு இல்லை.
யாருக்கு வாக்களிப்பது என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். நடந்தால் யார் மாகாணத்தின் முதலமைச்சர் என்பது தெரியவரும்.
அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடல்கள் மாகாண ஆட்சிக்கான தேர்தலை அரசை நடத்த வைப்பது? எப்படி நாங்கள் உறுதிப்படுத்துவது என்பது பற்றியும் மாகாண ஆட்சிக்கான அதிகாரங்களை எப்படி முழுமையாக முறையாகவும் பெற்றுக் கொள்வது என்பது பற்றிய கலந்துரையாடலாகவே அமைந்தது.
அதில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி பங்கு பற்றி இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதுவே தான் உரையாடலாக இருந்திருக்கும் .
அது தொடர்பாக கட்சி எவ்வாறு அவற்றை முகம் கொடுக்கும் என்பது இப்போதைக்கு மிகப் பிரதானமான விடயம் அல்ல.
அதற்கு முதலில் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் உள்ள அனைத்து கட்சிகளும் இலங்கையில் உள்ள அனைத்து முற்போக்கு ஜனநாயக சக்திகளும் அரசை தேர்தலை நடத்த வைக்க வேண்டும் என்றார்.
தேர்தலை நடத்த வேண்டும் என்பதே தமிழ் பேசும் மக்களின் கோரிக்கை வரதராஜப்பெருமாள் கருத்து தமிழ் பேசும் மக்கள் மத்தியில் உள்ள அனைத்து கட்சிகளும் இலங்கையில் உள்ள அனைத்து முற்போக்கு ஜனநாயக சக்திகளும் அரசை தேர்தலை நடத்த வைக்க வேண்டும் என இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபை முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தெரிவித்தார்.யாழில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில்,ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள கட்சிகளோடு நானும் இணைந்து நடத்திய கலந்துரையாடலின் பொழுது மாகாண சபைகளுக்கான தேர்தலை உடனடியாக எந்த வகையான காரணமும் சொல்லி காலம் தாழ்த்தாமல் உடனடியாக வைக்க வேண்டும்.அந்த கோரிக்கையை அனைத்து தமிழ் பேசுகின்ற மக்கள் மத்தியில் உள்ள கட்சிகளும் இலங்கையினுடைய அனைத்து கட்சிகளோடும் இணைந்தும் தனித்தனியாகவும் முன் வைக்க வேண்டும் என்ற அந்த இணக்கத்தோடு கலந்துரையாடல்கள் நடைபெற்றதாக நான் நினைக்கிறேன்.தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது இலங்கை மக்கள் அனைவருடைய கோரிக்கையாக தான் பார்க்கிறேன். நடத்தப்பட வேண்டிய தேர்தல்களை உரிய காலத்தில் நடத்தாமல் இருப்பது அரசியல் யாப்புக்கும் விரோதமானது. ஜனநாயகத்தை விரோதமாக்கி அதிகாரத்தில் இருக்கின்ற தேசிய மக்கள் சக்தியினர் காரணங்கள் எதையும் கூறாமல் தேர்தல்களை நடத்த வேண்டும். அரசியல் கட்சிகளுடைய தலைவர்களோடும் இலங்கையினுடைய பல்வேறு சமூகங்களின் உடைய அரசியல் சமூக பிரமுகர்களோடும் நான் நடத்தி வருகின்ற சந்திப்புகள் தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பதல்ல. தேர்தல் இன்று வந்தால் தான் எப்படி ஒரு கட்சி தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்று பிரச்சினையே வரும். அந்த விடயங்களுக்குள் நான் எந்த விதமான அக்கறையும் செலுத்துவதற்கு இல்லை. யாருக்கு வாக்களிப்பது என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். நடந்தால் யார் மாகாணத்தின் முதலமைச்சர் என்பது தெரியவரும்.அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடல்கள் மாகாண ஆட்சிக்கான தேர்தலை அரசை நடத்த வைப்பது எப்படி நாங்கள் உறுதிப்படுத்துவது என்பது பற்றியும் மாகாண ஆட்சிக்கான அதிகாரங்களை எப்படி முழுமையாக முறையாகவும் பெற்றுக் கொள்வது என்பது பற்றிய கலந்துரையாடலாகவே அமைந்தது. அதில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி பங்கு பற்றி இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதுவே தான் உரையாடலாக இருந்திருக்கும் .அது தொடர்பாக கட்சி எவ்வாறு அவற்றை முகம் கொடுக்கும் என்பது இப்போதைக்கு மிகப் பிரதானமான விடயம் அல்ல. அதற்கு முதலில் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் உள்ள அனைத்து கட்சிகளும் இலங்கையில் உள்ள அனைத்து முற்போக்கு ஜனநாயக சக்திகளும் அரசை தேர்தலை நடத்த வைக்க வேண்டும் என்றார்.