இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றைய தினத்துடன் ஒப்பிடும்போது 20,000 ரூபாயால் குறைந்துள்ளது.
இன்று 18ம் திகதி காலை கொழும்பு தங்கச் சந்தையில் '22 கரட்' தங்கத்தின் ஒரு பவுண் விலை 360,800 ரூபாவாக குறைந்துள்ளது.
நேற்று இதன் விலை 379,200 ரூபாவாக காணப்பட்டது.
இதற்கிடையில், நேற்று ரூ.410,000 ஆக இருந்த 24 காரட் தங்க சவரனின் விலை இன்று ரூ.390,000 ஆகக் குறைந்துள்ளது.
கடந்த மாதம் முதல் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.
உலகின் பல நாடுகள் மீது அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முன்னெடுத்த வர்த்தக வரியை தொடர்ந்தே கடந்த ஏப்ரல் மாதம் முதல் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டு இருந்தன.
இவ்வாறான நிலையில், இன்றைய தினம் உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை 20 ஆயிரம் ரூபாவால் குறைந்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒரே நாளில் 20 ஆயிரம் ரூபாவால் சரிந்த தங்கத்தின் விலை இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றைய தினத்துடன் ஒப்பிடும்போது 20,000 ரூபாயால் குறைந்துள்ளது. இன்று 18ம் திகதி காலை கொழும்பு தங்கச் சந்தையில் '22 கரட்' தங்கத்தின் ஒரு பவுண் விலை 360,800 ரூபாவாக குறைந்துள்ளது.நேற்று இதன் விலை 379,200 ரூபாவாக காணப்பட்டது.இதற்கிடையில், நேற்று ரூ.410,000 ஆக இருந்த 24 காரட் தங்க சவரனின் விலை இன்று ரூ.390,000 ஆகக் குறைந்துள்ளது.கடந்த மாதம் முதல் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.உலகின் பல நாடுகள் மீது அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முன்னெடுத்த வர்த்தக வரியை தொடர்ந்தே கடந்த ஏப்ரல் மாதம் முதல் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டு இருந்தன.இவ்வாறான நிலையில், இன்றைய தினம் உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை 20 ஆயிரம் ரூபாவால் குறைந்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.