• Oct 18 2025

பல சர்ச்சைக்குரிய தகவல்களை அடுத்தடுத்து அம்பலப்படுத்திய செவ்வந்தி

Aathira / Oct 18th 2025, 9:03 am
image

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி, கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவினரால் தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். 

விசாரணையின் போது, முன்னாள் காதலர் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான ஒருவரின் மூலம் 'கெஹெல்பத்தற் பத்மே' எனப்படும் ஒருவரை அறிந்துகொண்டதாக கூறினார். 

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் துப்பாக்கிதாரி என்று கூறப்படும் சமிந்து தில்ஷான் பியுமங்க என்பவரை 'பத்மே' தனக்கு அறிமுகப்படுத்தியதாகவும் இஷாரா விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். 

" எப்படியாவது அவனை வைத்து வேலையைச் செய்து கொள்" என்று 'பத்மே' தனக்குக் கூறியதாகவும் தெரிவித்த அவர்,

'கெஹெல்பத்தற பத்மே' உடனான நட்பு காரணமாக, கொலைக்காக எந்தப் பணமும் பெறவில்லை என்றும்  விசாரணை அதிகாரிகளிடம் கூறியுள்ளார். 

மேலும், கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட அதே நாளில், அதாவது கடந்த பெப்ரவரி 19 ஆம் திகதி இரவு தான் வெலிபென்ன பிரதேசத்தில் உள்ள ஒரு வீட்டில் இரவு தங்கியிருந்ததாகவும், 

அடுத்த நாள் 'கெஹெல்பத்தற பத்மே'வின் நெருங்கிய நண்பர்  ஒருவரின், தொடங்கொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில்  ஒன்றரை மாதங்கள் தங்கியிருந்ததாகவும்,

ஏப்ரல் 13 ஆம் திகதி, தொடங்கொடவில் இருந்து மித்தெனிய பிரதேசத்தில் அவர் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

புத்தாண்டுக் காலம் என்பதால், பொலிஸ் அதிகாரிகள் வருடப் பணிச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்ததால், அன்றைய தினத்தை அவர்கள் தெரிவு செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அங்கு தங்கியிருந்த அவர், மே மாதம் 6 ஆம் திகதி, அதாவது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெற்ற நாளில், யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுள்ளதாக பொலிஸார் கண்டறிந்துள்ளனர். 

அந்த காலத்தில் தான் எந்தவொரு கையடக்க தொலைபேசியையும் பயன்படுத்தவில்லை என்றும் இஷாரா செவ்வந்தி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இவருக்கு அடைக்கலம் கொடுத்த வெலிபென்ன வீட்டிலுள்ள உரிமையாளர், அவருடைய மருமகன் மற்றும் அளுத்கம பொலிஸ் கான்ஸ்டபிளையும் கொழும்பு குற்றப் பிரிவு கைது செய்துள்ளது. 

அத்துடன், தொடங்கொட வீட்டில் அடைக்கலம் கொடுத்த நபரையும், மித்தெனிய பிரதேசத்தில் அவருக்கு அடைக்கலம் கொடுத்த வீட்டில் இருந்த பெண்ணையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். 

எவ்வாறாயினும், அந்தக் கைது செய்யப்பட்ட பெண், 'ஹரக் கட்டா'வைக் கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் ஊழியரின் மனைவி என்று பொலிஸார் தெரிவித்தனர். 

மேலதிக விசாரணைகள், மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரத்னவின் வழிகாட்டுதலின் கீழ், 

கொழும்புக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஷாந்த சில்வாவின் மேற்பார்வையில் கொழும்பு குற்றப் பிரிவினரால் மேற்கொள்ளப்படுகின்றன.

பல சர்ச்சைக்குரிய தகவல்களை அடுத்தடுத்து அம்பலப்படுத்திய செவ்வந்தி கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி, கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவினரால் தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். விசாரணையின் போது, முன்னாள் காதலர் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான ஒருவரின் மூலம் 'கெஹெல்பத்தற் பத்மே' எனப்படும் ஒருவரை அறிந்துகொண்டதாக கூறினார். கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் துப்பாக்கிதாரி என்று கூறப்படும் சமிந்து தில்ஷான் பியுமங்க என்பவரை 'பத்மே' தனக்கு அறிமுகப்படுத்தியதாகவும் இஷாரா விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். " எப்படியாவது அவனை வைத்து வேலையைச் செய்து கொள்" என்று 'பத்மே' தனக்குக் கூறியதாகவும் தெரிவித்த அவர்,'கெஹெல்பத்தற பத்மே' உடனான நட்பு காரணமாக, கொலைக்காக எந்தப் பணமும் பெறவில்லை என்றும்  விசாரணை அதிகாரிகளிடம் கூறியுள்ளார். மேலும், கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட அதே நாளில், அதாவது கடந்த பெப்ரவரி 19 ஆம் திகதி இரவு தான் வெலிபென்ன பிரதேசத்தில் உள்ள ஒரு வீட்டில் இரவு தங்கியிருந்ததாகவும், அடுத்த நாள் 'கெஹெல்பத்தற பத்மே'வின் நெருங்கிய நண்பர்  ஒருவரின், தொடங்கொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில்  ஒன்றரை மாதங்கள் தங்கியிருந்ததாகவும்,ஏப்ரல் 13 ஆம் திகதி, தொடங்கொடவில் இருந்து மித்தெனிய பிரதேசத்தில் அவர் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்றுள்ளதாகவும் தெரிவித்தார்.புத்தாண்டுக் காலம் என்பதால், பொலிஸ் அதிகாரிகள் வருடப் பணிச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்ததால், அன்றைய தினத்தை அவர்கள் தெரிவு செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.அங்கு தங்கியிருந்த அவர், மே மாதம் 6 ஆம் திகதி, அதாவது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெற்ற நாளில், யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுள்ளதாக பொலிஸார் கண்டறிந்துள்ளனர். அந்த காலத்தில் தான் எந்தவொரு கையடக்க தொலைபேசியையும் பயன்படுத்தவில்லை என்றும் இஷாரா செவ்வந்தி தெரிவித்துள்ளார்.இதற்கிடையில், இவருக்கு அடைக்கலம் கொடுத்த வெலிபென்ன வீட்டிலுள்ள உரிமையாளர், அவருடைய மருமகன் மற்றும் அளுத்கம பொலிஸ் கான்ஸ்டபிளையும் கொழும்பு குற்றப் பிரிவு கைது செய்துள்ளது. அத்துடன், தொடங்கொட வீட்டில் அடைக்கலம் கொடுத்த நபரையும், மித்தெனிய பிரதேசத்தில் அவருக்கு அடைக்கலம் கொடுத்த வீட்டில் இருந்த பெண்ணையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். எவ்வாறாயினும், அந்தக் கைது செய்யப்பட்ட பெண், 'ஹரக் கட்டா'வைக் கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் ஊழியரின் மனைவி என்று பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகள், மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரத்னவின் வழிகாட்டுதலின் கீழ், கொழும்புக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஷாந்த சில்வாவின் மேற்பார்வையில் கொழும்பு குற்றப் பிரிவினரால் மேற்கொள்ளப்படுகின்றன.

Advertisement

Advertisement

Advertisement