• Oct 18 2025

இலஞ்சம் பெற்ற விவசாயி அதிகாரி கைது!

shanuja / Oct 17th 2025, 9:13 am
image

அரசாங்க காணியின் ஒரு பகுதியை பயிர்ச்செய்கைக்கு வழங்குவதற்காக ஒருவரிடமிருந்து 1.2 மில்லியன் ரூபாயை இலஞ்சமாக கோரி பெற்றதற்காக விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர் ஒருவர் நேற்று (16) இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார். 


மஹவ பகுதியைச் சேர்ந்த ஒருவர் அளித்த முறைப்பாட்டை தொடர்ந்து இந்த கைது இடம்பெற்றுள்ளது. 


சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டு பயிரிடப்பட்ட சுமார் 20 ஏக்கர் அரசாங்க காணி ஒன்றில், 12 ஏக்கர் அளவில் முறைப்பாட்டாளருக்கு பயிர்ச்செய்கைக்கு வழங்குவதற்காக அந்த இடத்திற்கு சந்தேகநபரால் ஏக்கர் வரி செலுத்திப்பட்டதாக பற்றுச்சீட்டு வழங்கப்பட்டது.


தேவையான பணிகளை மேற்கொள்வதற்கு ரூ. 3.5 மில்லியன் தொகை கோரப்பட்டது. 


அதிலிருந்து ரூ. 1.0 மில்லியனையும் மீதமுள்ள 2.5 மில்லியனில் இருந்து ரூ. 1.2 மில்லியனை இலஞ்சமாக கோரி பெற்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார். 


தியலும விவசாய சேவை மையத்தின் விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 


நேற்று மதியம் 12.15 மணியளவில் தனமல்வில - வெல்லவாய பிரதான வீதியில் உள்ள எதிலிவெவ நகரில் உள்ள ஒரு உணவகத்தில் வைத்து இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார். 


கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வெல்லவாய பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


இலஞ்சம் பெற்ற விவசாயி அதிகாரி கைது அரசாங்க காணியின் ஒரு பகுதியை பயிர்ச்செய்கைக்கு வழங்குவதற்காக ஒருவரிடமிருந்து 1.2 மில்லியன் ரூபாயை இலஞ்சமாக கோரி பெற்றதற்காக விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர் ஒருவர் நேற்று (16) இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார். மஹவ பகுதியைச் சேர்ந்த ஒருவர் அளித்த முறைப்பாட்டை தொடர்ந்து இந்த கைது இடம்பெற்றுள்ளது. சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டு பயிரிடப்பட்ட சுமார் 20 ஏக்கர் அரசாங்க காணி ஒன்றில், 12 ஏக்கர் அளவில் முறைப்பாட்டாளருக்கு பயிர்ச்செய்கைக்கு வழங்குவதற்காக அந்த இடத்திற்கு சந்தேகநபரால் ஏக்கர் வரி செலுத்திப்பட்டதாக பற்றுச்சீட்டு வழங்கப்பட்டது.தேவையான பணிகளை மேற்கொள்வதற்கு ரூ. 3.5 மில்லியன் தொகை கோரப்பட்டது. அதிலிருந்து ரூ. 1.0 மில்லியனையும் மீதமுள்ள 2.5 மில்லியனில் இருந்து ரூ. 1.2 மில்லியனை இலஞ்சமாக கோரி பெற்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார். தியலும விவசாய சேவை மையத்தின் விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று மதியம் 12.15 மணியளவில் தனமல்வில - வெல்லவாய பிரதான வீதியில் உள்ள எதிலிவெவ நகரில் உள்ள ஒரு உணவகத்தில் வைத்து இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வெல்லவாய பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement