• Oct 18 2025

எலும்பு நெய்யரியாதல் தினத்தில் சித்தமருத்துவ சிகிச்சை முறை குறித்த விழிப்புணர்வு அறிக்கை

Aathira / Oct 18th 2025, 2:31 pm
image

எலும்பு நெய்யரியாதல் தினத்தில் சித்தமருத்துவ சிகிச்சை முறை குறித்த விழிப்புணர்வு அறிக்கையொன்றினை அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர் சங்கத்தின் (Unemployed Union) எலும்பியல் நோய்ப்பிரிவினர் வெளியிட்டுள்ளனர். 

இவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

அக்டோபர் 20 ஆம் திகதி உலகம் முழுவதும் எலும்பு நெய்யரி தினம் (World Osteoporosis Day) எனக் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளின் நோக்கம் — எலும்புகளின் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, இந்நோயிலிருந்து மக்களை பாதுகாப்பதாகும்.

எலும்புகளின் அடர்த்தி குறைந்து, அவை எளிதில் முறியும் நிலையே இது. குறிப்பாக பெண்களில் மாதவிடாய் நிறுத்தத்தின் பின்னரும் முதியவர்களில் பொதுவாகவும் போதிய ஊட்டச்சத்து இல்லாமையினால் சில இளைஞர்களிடையேயும் இந்நோய் அதிகம் காணப்படுகின்றது.

கல்சியம் மற்றும் வைட்டமின் டீ குறைபாடு, போதிய உடற்பயிற்சி இல்லாமை, அதிகப்படியான மது, புகை பழக்கம் மற்றும் ஹார்மோன் மாற்றங்களால் இந்நோய் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

சித்த மற்றும் ஆயுர்வேத யுனானி  மருத்துவத்தில் எலும்பு வலிமையை அதிகரிக்கும் பல மூலிகைச் சிகிச்சைகள் மற்றும் லேகியங்கள் பயன்படுகின்றன.

சித்தமருத்துவமானது, எலும்பின் நெய்யரி நோய்க்கு இயற்கை வழி தீர்வுகளை வழங்குகிறது. என்பு தாதுவின் வலிமை குறைதலே இந்த நோயின் மூல காரணம் என்பதால், அதனை வலுப்படுத்தும் மூலிகைகள் மற்றும் உணவுப் பழக்கங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன.

இன்றைய இளைய தலைமுறையிலும் போதிய சத்துக்களின்மையாலும், தொ(ல்)லைபேசி மற்றும் கணினி அதிகம் பாவிப்பதாலும் குறைந்த உடற்பயிற்சியின் காரணமாகவும் இந்நோய் அதிகரித்து வருகின்றது. ஒவ்வொருவரும் தங்கள் எலும்பு ஆரோக்கியத்தை பராமரிக்க உணவு, பழக்கம், உடற்பயிற்சி மற்றும் மருத்துவ பரிசோதனைகளில் கவனம் செலுத்துவது அவசியமே.

சித்த சிகிச்சைமுறையின் நோக்கங்கள்

1.வாதத்தை சமப்படுத்துதல்

2.எலும்பு தாதுவை உறுதியாக்குதல்

3.ஏனைய உடற் தாதுக்களைப் பலப்படுத்தி மீள் வளர்ச்சி ஏற்படுத்துதல்

4.வலி, வீக்கம், விறைப்பு ஆகியவற்றைத் தணித்து புத்துயிர்பளித்தல் என்பனவாகும்

சித்த மருந்துகளாக, அமுக்கரா சூரணம், சங்கு பஸ்பம் , எலும்பு பஸ்பம், சங்கு பஸ்ப்பம், முத்துசிப்பி பஸ்பம், வெண்காரம் பஸ்பம் உள்ளன.இவை  கால்சியத்தை வழங்கி எலும்பை உறுதிப்படுத்தும் வலிமைகொண்டவை. மருந்துகளின் வகை, அளவை மருத்துவரே தீர்மானிப்பார். 

பொரளை தேசிய ஆயுர்வேத வைத்தியசாலை, கைதடி மற்றும் கோணேசபுரியில் அமைந்துள்ள சித்த போதனா வைத்தியசாலைகள், கம்பஹா விக்கிரமராச்சி ஆயுர்வேத போதனா வைத்தியசாலை, மட்டக்களப்பு மற்றும் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலைகள், கப்பல்துறை ஆதார வைத்தியசாலை, மன்னார், வவுனியா, கிளிநொச்சி தள வைத்தியசாலைகள், மாதம்பே ஆதார மருத்துவமனை, மேலும் மஞ்சந்தொடுவாய் மற்றும் நிந்தவூரில் அமைந்துள்ள யூனானி ஆயுர்வேத ஆராய்ச்சி மருத்துவமனைகள் ஆகியவை நாட்டின் முக்கியமான சித்த, ஆயுர்வேத மற்றும் யூனானி மருத்துவ சேவைகள் வழங்கும் மையங்களாக விளங்குகின்றன. இதற்கு மேலாக, ஒவ்வொரு பிரதேச சபைகளின் கீழும் இயங்கும் இலவச சுதேச மருத்துவமனைகள் மூலம் பொதுமக்கள் துல்லியமான, தரமான சிகிச்சைகளை இலவசமாகப் பெறும் வசதி உள்ளது. எனினும், இச்சேவைகள் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமையால், பலர் இதன் பயன்களை முழுமையாகப் பெற முடியாமல் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

போதுமான நீர் உட்கொள்வதுடன்  எள்ளு, முருங்கைக்கீரை, பசும்பால், நல்லெண்ணெய் ஆகாரம் சிறந்த உணவாவதுடன் குளிர்ந்த, பழைய உணவுகள், குளிர்பானங்கள், மது, அதிக காபி தவிர்க்கப்பட வேண்டும்.

நீண்ட நேரம் ஓய்வாக இருத்தல் மற்றும் அதிகவேலை என்பவற்றை தவிர்க்க வேண்டுமென அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர் சங்கத்தின் (Unemployed Union) எலும்பியல் நோய்ப்பிரிவினர் பொதுமக்களை  கேட்டுக்கொண்டுள்ளனர்.


எலும்பு நெய்யரியாதல் தினத்தில் சித்தமருத்துவ சிகிச்சை முறை குறித்த விழிப்புணர்வு அறிக்கை எலும்பு நெய்யரியாதல் தினத்தில் சித்தமருத்துவ சிகிச்சை முறை குறித்த விழிப்புணர்வு அறிக்கையொன்றினை அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர் சங்கத்தின் (Unemployed Union) எலும்பியல் நோய்ப்பிரிவினர் வெளியிட்டுள்ளனர். இவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அக்டோபர் 20 ஆம் திகதி உலகம் முழுவதும் எலும்பு நெய்யரி தினம் (World Osteoporosis Day) எனக் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளின் நோக்கம் — எலும்புகளின் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, இந்நோயிலிருந்து மக்களை பாதுகாப்பதாகும்.எலும்புகளின் அடர்த்தி குறைந்து, அவை எளிதில் முறியும் நிலையே இது. குறிப்பாக பெண்களில் மாதவிடாய் நிறுத்தத்தின் பின்னரும் முதியவர்களில் பொதுவாகவும் போதிய ஊட்டச்சத்து இல்லாமையினால் சில இளைஞர்களிடையேயும் இந்நோய் அதிகம் காணப்படுகின்றது.கல்சியம் மற்றும் வைட்டமின் டீ குறைபாடு, போதிய உடற்பயிற்சி இல்லாமை, அதிகப்படியான மது, புகை பழக்கம் மற்றும் ஹார்மோன் மாற்றங்களால் இந்நோய் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.சித்த மற்றும் ஆயுர்வேத யுனானி  மருத்துவத்தில் எலும்பு வலிமையை அதிகரிக்கும் பல மூலிகைச் சிகிச்சைகள் மற்றும் லேகியங்கள் பயன்படுகின்றன.சித்தமருத்துவமானது, எலும்பின் நெய்யரி நோய்க்கு இயற்கை வழி தீர்வுகளை வழங்குகிறது. என்பு தாதுவின் வலிமை குறைதலே இந்த நோயின் மூல காரணம் என்பதால், அதனை வலுப்படுத்தும் மூலிகைகள் மற்றும் உணவுப் பழக்கங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன.இன்றைய இளைய தலைமுறையிலும் போதிய சத்துக்களின்மையாலும், தொ(ல்)லைபேசி மற்றும் கணினி அதிகம் பாவிப்பதாலும் குறைந்த உடற்பயிற்சியின் காரணமாகவும் இந்நோய் அதிகரித்து வருகின்றது. ஒவ்வொருவரும் தங்கள் எலும்பு ஆரோக்கியத்தை பராமரிக்க உணவு, பழக்கம், உடற்பயிற்சி மற்றும் மருத்துவ பரிசோதனைகளில் கவனம் செலுத்துவது அவசியமே.சித்த சிகிச்சைமுறையின் நோக்கங்கள்1.வாதத்தை சமப்படுத்துதல்2.எலும்பு தாதுவை உறுதியாக்குதல்3.ஏனைய உடற் தாதுக்களைப் பலப்படுத்தி மீள் வளர்ச்சி ஏற்படுத்துதல்4.வலி, வீக்கம், விறைப்பு ஆகியவற்றைத் தணித்து புத்துயிர்பளித்தல் என்பனவாகும்சித்த மருந்துகளாக, அமுக்கரா சூரணம், சங்கு பஸ்பம் , எலும்பு பஸ்பம், சங்கு பஸ்ப்பம், முத்துசிப்பி பஸ்பம், வெண்காரம் பஸ்பம் உள்ளன.இவை  கால்சியத்தை வழங்கி எலும்பை உறுதிப்படுத்தும் வலிமைகொண்டவை. மருந்துகளின் வகை, அளவை மருத்துவரே தீர்மானிப்பார். பொரளை தேசிய ஆயுர்வேத வைத்தியசாலை, கைதடி மற்றும் கோணேசபுரியில் அமைந்துள்ள சித்த போதனா வைத்தியசாலைகள், கம்பஹா விக்கிரமராச்சி ஆயுர்வேத போதனா வைத்தியசாலை, மட்டக்களப்பு மற்றும் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலைகள், கப்பல்துறை ஆதார வைத்தியசாலை, மன்னார், வவுனியா, கிளிநொச்சி தள வைத்தியசாலைகள், மாதம்பே ஆதார மருத்துவமனை, மேலும் மஞ்சந்தொடுவாய் மற்றும் நிந்தவூரில் அமைந்துள்ள யூனானி ஆயுர்வேத ஆராய்ச்சி மருத்துவமனைகள் ஆகியவை நாட்டின் முக்கியமான சித்த, ஆயுர்வேத மற்றும் யூனானி மருத்துவ சேவைகள் வழங்கும் மையங்களாக விளங்குகின்றன. இதற்கு மேலாக, ஒவ்வொரு பிரதேச சபைகளின் கீழும் இயங்கும் இலவச சுதேச மருத்துவமனைகள் மூலம் பொதுமக்கள் துல்லியமான, தரமான சிகிச்சைகளை இலவசமாகப் பெறும் வசதி உள்ளது. எனினும், இச்சேவைகள் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமையால், பலர் இதன் பயன்களை முழுமையாகப் பெற முடியாமல் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.போதுமான நீர் உட்கொள்வதுடன்  எள்ளு, முருங்கைக்கீரை, பசும்பால், நல்லெண்ணெய் ஆகாரம் சிறந்த உணவாவதுடன் குளிர்ந்த, பழைய உணவுகள், குளிர்பானங்கள், மது, அதிக காபி தவிர்க்கப்பட வேண்டும்.நீண்ட நேரம் ஓய்வாக இருத்தல் மற்றும் அதிகவேலை என்பவற்றை தவிர்க்க வேண்டுமென அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர் சங்கத்தின் (Unemployed Union) எலும்பியல் நோய்ப்பிரிவினர் பொதுமக்களை  கேட்டுக்கொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement