• Oct 18 2025

ஈழத்து குறுந்திரைப்படத்திற்கு சர்வதேச அங்கீகாரம்; மன்னாரை சேர்ந்த சிறுமிக்கு கிடைத்த சர்வதேச விருது!

Chithra / Oct 17th 2025, 9:01 am
image


அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலிஸ் நகரில் நடைபெற்ற “International Art & Heart Film Festival – 2025” சர்வதேச குறுந்திரைப்பட விழாவில், மன்னாரைச் சேர்ந்த இளைஞர் கவிவர்மன் இயக்கிய “மடமை தகர்” எனும் குறுந்திரைப்படம் பெருமை சேர்த்துள்ளது.

இத்திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரமாக நடித்த மன்னார் ஓலைத்தொடுவாய், சின்ன கரிசல் பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி ரஞ்சித் குருஸ் சுவேதா, “Best Monologue” என்ற விருதை வென்றுள்ளார்.

தற்கொலை என்பது ஒரு தீர்வல்ல என்பதை மையக்கருவாகக் கொண்டு உருவாக்கப்பட்ட “மடமை தகர்” குறுந்திரைப்படம், இதற்கு முன் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற சர்வதேச குறுந்திரைப்பட விழாவில் “சிறந்த இயக்குநர்” என்ற விருதையும் வென்றிருந்தது.

இப்போது மீண்டும் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளதால், மன்னார் மண்ணைச் சேர்ந்த இளம் திறமைசாலிகளுக்கு பெருமை சேர்த்துள்ளது.

சினிமா துறையில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற மன்னாரைச் சேர்ந்த சிறுமி சுவேதா, இவ்விருதின் மூலம் முதன்முறையாக ஒரு சர்வதேச நாட்டில் சிறந்த நடிப்பிற்கான விருதை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.


ஈழத்து குறுந்திரைப்படத்திற்கு சர்வதேச அங்கீகாரம்; மன்னாரை சேர்ந்த சிறுமிக்கு கிடைத்த சர்வதேச விருது அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலிஸ் நகரில் நடைபெற்ற “International Art & Heart Film Festival – 2025” சர்வதேச குறுந்திரைப்பட விழாவில், மன்னாரைச் சேர்ந்த இளைஞர் கவிவர்மன் இயக்கிய “மடமை தகர்” எனும் குறுந்திரைப்படம் பெருமை சேர்த்துள்ளது.இத்திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரமாக நடித்த மன்னார் ஓலைத்தொடுவாய், சின்ன கரிசல் பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி ரஞ்சித் குருஸ் சுவேதா, “Best Monologue” என்ற விருதை வென்றுள்ளார்.தற்கொலை என்பது ஒரு தீர்வல்ல என்பதை மையக்கருவாகக் கொண்டு உருவாக்கப்பட்ட “மடமை தகர்” குறுந்திரைப்படம், இதற்கு முன் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற சர்வதேச குறுந்திரைப்பட விழாவில் “சிறந்த இயக்குநர்” என்ற விருதையும் வென்றிருந்தது.இப்போது மீண்டும் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளதால், மன்னார் மண்ணைச் சேர்ந்த இளம் திறமைசாலிகளுக்கு பெருமை சேர்த்துள்ளது.சினிமா துறையில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற மன்னாரைச் சேர்ந்த சிறுமி சுவேதா, இவ்விருதின் மூலம் முதன்முறையாக ஒரு சர்வதேச நாட்டில் சிறந்த நடிப்பிற்கான விருதை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement