அகில இலங்கை ரீதியாக எங்களுக்கு உதவி செய்த மக்களின் பிரச்சினைகளை வெளியுலகுக்கு கொண்டு வந்த அனைத்து ஊடகவியலாளர்களையும் நாங்கள் இந்த சந்தர்ப்பத்திலே பாராட்டுகின்றோம் என்று அகில இலங்கை அரசாங்கம் பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் தெரிவித்தார்.
அகில இலங்கை அரசாங்கப் பொது ஊழியர் சங்கத்தின் 33வது ஆண்டு மே தின கூட்டம் இன்று (01) கல்முனை தமிழர் கலாசார மண்டபத்தில் எளிமையான முறையில் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் தலைமையில் நடைபெற்றது.
இங்கு கலந்து கொண்டு உரையாற்றிய சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் மேலும் உரையாற்றுகையில்,
அரசாங்க ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் சம்பள உயர்வு வழங்கியதுடன், அதனை அடிப்படைச் சம்பளத்தில் சேர்த்து வழங்கியுள்ளார்கள் எனவே ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா அவர்களுக்கு எமது சங்கம் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
தொழிலாளர்கள் சார் நலன்கள், விடயங்களில் அக்கறையோடு செயல்படுகின்ற இந்த அரசாங்கம் தொடர்ந்தும் சிறப்பாக நாட்டை முன்னேற்றிச் செல்ல வேண்டும் நமது தொழிலாளர்கள் மிகவும் சிறப்பாக உன்னதமாக வாழ வேண்டும் என்ற விடயத்தில் கரிசனை காட்டுகின்ற அரசாங்கத்துக்கு மக்கள் அனைவரும் இணைந்து ஆதரவு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் இங்கு விடுகின்றேன்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு 20 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினை நாங்கள் இந்த மே தின கோரிக்கையாக அனுப்பி இருக்கின்றோம்
அதில் முக்கியமாக,
அரச சேவையில் பணிபுரிந்து அரச நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 03/2016 சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர், அரச நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 06/2006 மற்றும் அதற்குத் திருத்தமாக வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிருபங்களின் கீழ் அடிப்படைச் சம்பளம் பெற்று அரச பணியிலிருந்து ஓய்வுபெற்ற அரச சேவையாளர்கள் இன்றைய பொருளாதார கஷ்டமான சூழ் நிலமையில் குறைவான ஓய்வூதியத்தைப்பெற்று வாழ்ந்துவருகின்றனர்.
இவ்வாறான அரசசேவையாளர்களுக்கு அரசு உதவவேண்டுமெனக் கோரல்.
மற்றும், பயங்காவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கும் மற்றும் இச்சட்டத்தினால் நாணமல்போனவர்கள், பாதிக்கப்பட்களுக்கு தாழ்ந்தகாது நியாயத்தைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமெனக் கோரல் போன்ற 20 அம்ச கோரிக்கைகளை மே தின கோரிக்கையாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளோம் என்றார்.
இக்கூட்டத்தில் ஊழியர்களின் நலன் மற்றும் தொழிலாளர் நலன் தொடர்பான விசேட உரைகள் இடம்பெற்றன.
மே தினத்தில் 20 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மகஜரை ஜனாதிபதிக்கு அனுப்பிய அகில இலங்கை அரச பொது ஊழியர் சங்கம் அகில இலங்கை ரீதியாக எங்களுக்கு உதவி செய்த மக்களின் பிரச்சினைகளை வெளியுலகுக்கு கொண்டு வந்த அனைத்து ஊடகவியலாளர்களையும் நாங்கள் இந்த சந்தர்ப்பத்திலே பாராட்டுகின்றோம் என்று அகில இலங்கை அரசாங்கம் பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் தெரிவித்தார்.அகில இலங்கை அரசாங்கப் பொது ஊழியர் சங்கத்தின் 33வது ஆண்டு மே தின கூட்டம் இன்று (01) கல்முனை தமிழர் கலாசார மண்டபத்தில் எளிமையான முறையில் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் தலைமையில் நடைபெற்றது.இங்கு கலந்து கொண்டு உரையாற்றிய சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் மேலும் உரையாற்றுகையில்,அரசாங்க ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் சம்பள உயர்வு வழங்கியதுடன், அதனை அடிப்படைச் சம்பளத்தில் சேர்த்து வழங்கியுள்ளார்கள் எனவே ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா அவர்களுக்கு எமது சங்கம் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.தொழிலாளர்கள் சார் நலன்கள், விடயங்களில் அக்கறையோடு செயல்படுகின்ற இந்த அரசாங்கம் தொடர்ந்தும் சிறப்பாக நாட்டை முன்னேற்றிச் செல்ல வேண்டும் நமது தொழிலாளர்கள் மிகவும் சிறப்பாக உன்னதமாக வாழ வேண்டும் என்ற விடயத்தில் கரிசனை காட்டுகின்ற அரசாங்கத்துக்கு மக்கள் அனைவரும் இணைந்து ஆதரவு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் இங்கு விடுகின்றேன்.ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு 20 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினை நாங்கள் இந்த மே தின கோரிக்கையாக அனுப்பி இருக்கின்றோம் அதில் முக்கியமாக, அரச சேவையில் பணிபுரிந்து அரச நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 03/2016 சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர், அரச நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 06/2006 மற்றும் அதற்குத் திருத்தமாக வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிருபங்களின் கீழ் அடிப்படைச் சம்பளம் பெற்று அரச பணியிலிருந்து ஓய்வுபெற்ற அரச சேவையாளர்கள் இன்றைய பொருளாதார கஷ்டமான சூழ் நிலமையில் குறைவான ஓய்வூதியத்தைப்பெற்று வாழ்ந்துவருகின்றனர்.இவ்வாறான அரசசேவையாளர்களுக்கு அரசு உதவவேண்டுமெனக் கோரல்.மற்றும், பயங்காவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கும் மற்றும் இச்சட்டத்தினால் நாணமல்போனவர்கள், பாதிக்கப்பட்களுக்கு தாழ்ந்தகாது நியாயத்தைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமெனக் கோரல் போன்ற 20 அம்ச கோரிக்கைகளை மே தின கோரிக்கையாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளோம் என்றார்.இக்கூட்டத்தில் ஊழியர்களின் நலன் மற்றும் தொழிலாளர் நலன் தொடர்பான விசேட உரைகள் இடம்பெற்றன.