• Sep 09 2025

மருத்துவத் தேவைக்காக யாழ்.வந்த யுவதி; திடீரென உயிரிழந்ததால் சோகத்தில் மூழ்கிய உறவுகள்

Chithra / Sep 8th 2025, 8:10 am
image

கனடாவில் வாழ்ந்து வந்த ஈழத்தைச் சேர்ந்த யுவதி ஒருவர் யாழ்ப்பாணம் வந்திருந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.  

ஷகனடாவின் ஸ்காபரோவைச் சேர்ந்த சத்தீஸ்வரன் சயினகா என்ற 22 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

வடமராட்சி - கல்லுவம் பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்ட யுவதி தெல்லிப்பழை புற்றுநோய் சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த யுவதியின் இறுதிக் கிரியைகள் இன்று  கல்லுவத்தில் உள்ள அன்னாரின் பூர்வீக வீட்டில் இடம்பெறவுள்ளது.

குறித்த யுவதியின் திடீர் மரணத்தால் வடமராட்சி கல்லுவம் பிரதேசம் சோகத்தில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மருத்துவத் தேவைக்காக யாழ்.வந்த யுவதி; திடீரென உயிரிழந்ததால் சோகத்தில் மூழ்கிய உறவுகள் கனடாவில் வாழ்ந்து வந்த ஈழத்தைச் சேர்ந்த யுவதி ஒருவர் யாழ்ப்பாணம் வந்திருந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.  ஷகனடாவின் ஸ்காபரோவைச் சேர்ந்த சத்தீஸ்வரன் சயினகா என்ற 22 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வடமராட்சி - கல்லுவம் பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்ட யுவதி தெல்லிப்பழை புற்றுநோய் சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.குறித்த யுவதியின் இறுதிக் கிரியைகள் இன்று  கல்லுவத்தில் உள்ள அன்னாரின் பூர்வீக வீட்டில் இடம்பெறவுள்ளது.குறித்த யுவதியின் திடீர் மரணத்தால் வடமராட்சி கல்லுவம் பிரதேசம் சோகத்தில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement