• Oct 13 2026

வீதியில் தவறி விழுந்த பல்கலைக்கழக மாணவர்... அடுத்த நொடியே நடந்த பயங்கரம்!

Chithra / Oct 8th 2026, 11:37 am
image


காலி நோக்கி மோட்டார் சைக்கிள்களில் பயணித்த பல்கலைக்கழக மாணவர்கள் குழுவுக்கு இன்று காலை எதிர்பாராத விபத்து ஏற்பட்டுள்ளது. 


களுத்துறை, வஸ்கடுவ பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த மாணவர் ஒருவர் வீதியில் விழுந்துள்ளார். 


ஆனால்… அடுத்ததாக நடந்த சம்பவமே விபத்தை உயிரிழப்பாக மாற்றியுள்ளது. எதிர்த்திசையில் வந்த பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனத்தின் பின்பக்க சக்கரத்தில் மாணவர் சிக்கியுள்ளார். 


சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


உயிரிழந்தவர் களனிப் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயின்ற 21 வயதுடைய சித்தும் சங்கல்ப என அடையாளம் காணப்பட்டுள்ளார். 


அவர் தனது ஐந்து நண்பர்களுடன் சுற்றுலாவுக்காக கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


 இதற்கிடையில், விபத்து காரணமாக காலி வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், பொலிஸார் தலையிட்டு நிலைமையை கட்டுப்படுத்தினர்.


 விபத்து தொடர்பில் பாடசாலை வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


இந்தச் சம்பவம் அருகிலிருந்த கண்காணிப்பு கெமராவிலும் பதிவாகியுள்ளது.

வீதியில் தவறி விழுந்த பல்கலைக்கழக மாணவர். அடுத்த நொடியே நடந்த பயங்கரம் காலி நோக்கி மோட்டார் சைக்கிள்களில் பயணித்த பல்கலைக்கழக மாணவர்கள் குழுவுக்கு இன்று காலை எதிர்பாராத விபத்து ஏற்பட்டுள்ளது. களுத்துறை, வஸ்கடுவ பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த மாணவர் ஒருவர் வீதியில் விழுந்துள்ளார். ஆனால்… அடுத்ததாக நடந்த சம்பவமே விபத்தை உயிரிழப்பாக மாற்றியுள்ளது. எதிர்த்திசையில் வந்த பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனத்தின் பின்பக்க சக்கரத்தில் மாணவர் சிக்கியுள்ளார். சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் களனிப் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயின்ற 21 வயதுடைய சித்தும் சங்கல்ப என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் தனது ஐந்து நண்பர்களுடன் சுற்றுலாவுக்காக கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதற்கிடையில், விபத்து காரணமாக காலி வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், பொலிஸார் தலையிட்டு நிலைமையை கட்டுப்படுத்தினர். விபத்து தொடர்பில் பாடசாலை வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.இந்தச் சம்பவம் அருகிலிருந்த கண்காணிப்பு கெமராவிலும் பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement