• Oct 13 2026

சிறுநீரகச் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவி

dorin / Oct 13th 2026, 11:15 am
image

முள்ளியவளையில் சிறுநீரகச் செயலிழப்பால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வரும் மாணவி சிவவடிவேல் இந்துஜாவின் சிகிச்சைச் செலவுகளுக்காக முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலய நிர்வாகத்தினரால் ஒரு இலட்சம் ரூபா நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிதியுதவி நேற்றையதினம் (12.10.2026) மாலை வழங்கி வைக்கப்பட்டது. தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வரும் மாணவி சிவவடிவேல் இந்துஜா, இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் தொடர்ச்சியான மருத்துவ சிகிச்சை மற்றும் மேலதிக சிகிச்சைகள் தேவைப்படும் நிலையில் உள்ளார்.

இவரது மருத்துவச் சிகிச்சைக்காக 80 முதல் 90 இலட்சம் ரூபா வரை நிதி தேவைப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், மாணவியின் சிகிச்சைக்காக உதவிக்கரம் நீட்டியுள்ள காட்டா விநாயகர் ஆலய நிர்வாகத்தினரின் செயற்பாடு, ஏனைய ஆலயங்களும் இவ்வாறான மனிதாபிமானப் பணிகளில் ஈடுபடுவதற்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

ஆலயங்களின் நிதியிலிருந்து இவ்வாறான அவசர மருத்துவத் தேவைகளுக்காக உதவிகளை வழங்குவதன் மூலம், உயிருக்கு ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நேரத்தில் ஆதரவளிக்க முடியும் என்பதையும் இச்செயற்பாடு எடுத்துக்காட்டுகிறது.

மேலும், எதிர்காலத்தில் கல்வி கற்பதற்கான வசதி வாய்ப்புகள் குறைந்த பிள்ளைகளுக்கு உதவுதல், மருத்துவத் தேவைகளுக்காக நிதியுதவி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சமூகநலத் திட்டங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகக் காட்டா விநாயகர் ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

மருத்துவ நெருக்கடியில் சிக்கியுள்ள மாணவிக்கு உதவிக்கரம் நீட்டி, சமூகநலப் பணியில் முன்மாதிரியாகச் செயற்பட்ட காட்டா விநாயகர் ஆலய நிர்வாகத்தினரின் இம்முயற்சி பாராட்டுக்குரியது.

மாணவி இந்துஜாவின் சிகிச்சைக்குத் தேவையான பெருந்தொகை நிதியைத் திரட்டுவதற்கு ஏனைய ஆலயங்கள், சமூக அமைப்புகள், நலன்விரும்பிகள் மற்றும் பொதுமக்களும் முன்வருவது அவசியமாகும்.

சிறுநீரகச் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவி முள்ளியவளையில் சிறுநீரகச் செயலிழப்பால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வரும் மாணவி சிவவடிவேல் இந்துஜாவின் சிகிச்சைச் செலவுகளுக்காக முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலய நிர்வாகத்தினரால் ஒரு இலட்சம் ரூபா நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.குறித்த நிதியுதவி நேற்றையதினம் (12.10.2026) மாலை வழங்கி வைக்கப்பட்டது. தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வரும் மாணவி சிவவடிவேல் இந்துஜா, இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் தொடர்ச்சியான மருத்துவ சிகிச்சை மற்றும் மேலதிக சிகிச்சைகள் தேவைப்படும் நிலையில் உள்ளார்.இவரது மருத்துவச் சிகிச்சைக்காக 80 முதல் 90 இலட்சம் ரூபா வரை நிதி தேவைப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில், மாணவியின் சிகிச்சைக்காக உதவிக்கரம் நீட்டியுள்ள காட்டா விநாயகர் ஆலய நிர்வாகத்தினரின் செயற்பாடு, ஏனைய ஆலயங்களும் இவ்வாறான மனிதாபிமானப் பணிகளில் ஈடுபடுவதற்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது.ஆலயங்களின் நிதியிலிருந்து இவ்வாறான அவசர மருத்துவத் தேவைகளுக்காக உதவிகளை வழங்குவதன் மூலம், உயிருக்கு ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நேரத்தில் ஆதரவளிக்க முடியும் என்பதையும் இச்செயற்பாடு எடுத்துக்காட்டுகிறது.மேலும், எதிர்காலத்தில் கல்வி கற்பதற்கான வசதி வாய்ப்புகள் குறைந்த பிள்ளைகளுக்கு உதவுதல், மருத்துவத் தேவைகளுக்காக நிதியுதவி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சமூகநலத் திட்டங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகக் காட்டா விநாயகர் ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.மருத்துவ நெருக்கடியில் சிக்கியுள்ள மாணவிக்கு உதவிக்கரம் நீட்டி, சமூகநலப் பணியில் முன்மாதிரியாகச் செயற்பட்ட காட்டா விநாயகர் ஆலய நிர்வாகத்தினரின் இம்முயற்சி பாராட்டுக்குரியது.மாணவி இந்துஜாவின் சிகிச்சைக்குத் தேவையான பெருந்தொகை நிதியைத் திரட்டுவதற்கு ஏனைய ஆலயங்கள், சமூக அமைப்புகள், நலன்விரும்பிகள் மற்றும் பொதுமக்களும் முன்வருவது அவசியமாகும்.

Advertisement

Advertisement

Advertisement