• Oct 11 2026

இரகசிய தகவலையடுத்து யாழில் அதிரடி நடவடிக்கை - நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்ட பின்னணி

Chithra / Oct 8th 2026, 11:49 am
image


யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்மித்த பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


யாழ். நகர் பகுதியை அண்மித்த பகுதியில் இளைஞர்கள் சிலர் போதைப்பொருளுடன் நடமாடுவதாக பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போதே குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 390 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கைது செய்யப்பட்ட நால்வரும் உடுவில் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.


அவர்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இரகசிய தகவலையடுத்து யாழில் அதிரடி நடவடிக்கை - நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்ட பின்னணி யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்மித்த பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.யாழ். நகர் பகுதியை அண்மித்த பகுதியில் இளைஞர்கள் சிலர் போதைப்பொருளுடன் நடமாடுவதாக பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போதே குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 390 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கைது செய்யப்பட்ட நால்வரும் உடுவில் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.அவர்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement