• Oct 13 2026

தேசிய குரு பிரதீபா பிரபா விருதைப் பெற்றார் வவுனியா ஆசிரியர்

Aathira / Oct 13th 2026, 11:32 am
image

வவுனியா புதிய சாளம்பைக்குளத்தைச் சேர்ந்த ஆசிரியர் மொஹமட் றியாஸ், தேசிய மட்டத்தில் வழங்கப்படும் சிறந்த ஆசிரியர்களுக்கான தேசிய குரு பிரதீபா பிரபா விருதைப் பெற்று கௌரவிக்கப்பட்டுள்ளார்.

நாடு முழுவதிலும் உள்ள பாடசாலைகளில் கற்பித்தல் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களைக் கௌரவிக்கும் வகையில், வருடாந்தம் வழங்கப்படும் தேசிய குரு பிரதீபா பிரபா விருது வழங்கும் நிகழ்வு, 2026 ஒக்டோபர் 6ஆம் திகதி கொழும்பு ஆனந்தா கல்லூரி மாநாட்டு மண்டபத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இந்நிகழ்வில், வவுனியா புதிய சாளம்பைக்குளத்தைச் சேர்ந்தவரும், வ/சுந்தரபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் பிரதி அதிபரும் இரண்டாம் மொழி (சிங்களம்) பாட ஆசிரியருமான மொஹமட் றியாஸ் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

குறித்த விருதைப் பெற்றுக்கொள்வதற்காக வலயம், கோட்டம் மற்றும் மாகாண மட்டங்களில் நடைபெற்ற நேர்முகத் தேர்வுகளில் வெற்றிபெற்ற அவர், இறுதியாக அகில இலங்கை மட்டத்தில் நடைபெற்ற நேர்முகத் தேர்விலும் வெற்றிபெற்று இச்சிறப்புமிக்க விருதுக்குத் தெரிவாகியுள்ளார்.

கற்பித்தல் துறையில் தனது திறமையையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தி, தேசிய மட்டத்தில் அங்கீகாரம் பெற்றுள்ள ஆசிரியர் மொஹமட் றியாஸின் இச்சாதனை, வவுனியா மாவட்டத்திற்கும் அவர் பணியாற்றும் பாடசாலைச் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது.

வடக்கு மாகாணத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரே ஒரு முஸ்லிம் ஆசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது


தேசிய குரு பிரதீபா பிரபா விருதைப் பெற்றார் வவுனியா ஆசிரியர் வவுனியா புதிய சாளம்பைக்குளத்தைச் சேர்ந்த ஆசிரியர் மொஹமட் றியாஸ், தேசிய மட்டத்தில் வழங்கப்படும் சிறந்த ஆசிரியர்களுக்கான தேசிய குரு பிரதீபா பிரபா விருதைப் பெற்று கௌரவிக்கப்பட்டுள்ளார்.நாடு முழுவதிலும் உள்ள பாடசாலைகளில் கற்பித்தல் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களைக் கௌரவிக்கும் வகையில், வருடாந்தம் வழங்கப்படும் தேசிய குரு பிரதீபா பிரபா விருது வழங்கும் நிகழ்வு, 2026 ஒக்டோபர் 6ஆம் திகதி கொழும்பு ஆனந்தா கல்லூரி மாநாட்டு மண்டபத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இந்நிகழ்வில், வவுனியா புதிய சாளம்பைக்குளத்தைச் சேர்ந்தவரும், வ/சுந்தரபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் பிரதி அதிபரும் இரண்டாம் மொழி (சிங்களம்) பாட ஆசிரியருமான மொஹமட் றியாஸ் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.குறித்த விருதைப் பெற்றுக்கொள்வதற்காக வலயம், கோட்டம் மற்றும் மாகாண மட்டங்களில் நடைபெற்ற நேர்முகத் தேர்வுகளில் வெற்றிபெற்ற அவர், இறுதியாக அகில இலங்கை மட்டத்தில் நடைபெற்ற நேர்முகத் தேர்விலும் வெற்றிபெற்று இச்சிறப்புமிக்க விருதுக்குத் தெரிவாகியுள்ளார்.கற்பித்தல் துறையில் தனது திறமையையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தி, தேசிய மட்டத்தில் அங்கீகாரம் பெற்றுள்ள ஆசிரியர் மொஹமட் றியாஸின் இச்சாதனை, வவுனியா மாவட்டத்திற்கும் அவர் பணியாற்றும் பாடசாலைச் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது.வடக்கு மாகாணத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரே ஒரு முஸ்லிம் ஆசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement