• Oct 12 2026

20 தொழிலாளர்களுடன் பயணித்த பஸ்ஸுக்குநேர்ந்த சோகம்! மன்னாரில் பரபரப்பு சம்பவம்

Chithra / Oct 12th 2026, 4:25 pm
image


மன்னார் – யாழ்ப்பாணம் ஏ-32 பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


முழங்காவில் பகுதியில் இருந்து தனியார் நிறுவனமொன்றின் பணியாளர்கள் 20 பேரை ஏற்றிச் சென்ற சிறிய ரக பஸ், பள்ளமடு பகுதியில் திடீரென வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.


இந்த விபத்தில் நான்கு பேர் காயமடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையோர் காயங்களின்றித் தப்பியுள்ளனர்.


ஆனால், இந்த விபத்தில் சோகமான சம்பவமொன்றும் பதிவாகியுள்ளது.


விபத்து இடம்பெற்றபோது பஸ்ஸின் மிதிப்பலகையில் பயணித்த தொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


அவரது சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

20 தொழிலாளர்களுடன் பயணித்த பஸ்ஸுக்குநேர்ந்த சோகம் மன்னாரில் பரபரப்பு சம்பவம் மன்னார் – யாழ்ப்பாணம் ஏ-32 பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.முழங்காவில் பகுதியில் இருந்து தனியார் நிறுவனமொன்றின் பணியாளர்கள் 20 பேரை ஏற்றிச் சென்ற சிறிய ரக பஸ், பள்ளமடு பகுதியில் திடீரென வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் நான்கு பேர் காயமடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையோர் காயங்களின்றித் தப்பியுள்ளனர்.ஆனால், இந்த விபத்தில் சோகமான சம்பவமொன்றும் பதிவாகியுள்ளது.விபத்து இடம்பெற்றபோது பஸ்ஸின் மிதிப்பலகையில் பயணித்த தொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.அவரது சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement