முன்னாள் முதற்பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவின் உடல்நிலை தொடர்பில் கொழும்பு நீதிமன்றத்தில் இன்று வெளியான தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
'சிரிலிய சவிய' கணக்கில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேட்டுக் குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் முதற்பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, இன்று (13) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது ஷிராந்தி ராஜபக்ஷ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவில்லை.
ஷிராந்தி ராஜபக்ஷ நேற்று சிறைச்சாலையில் இருந்தபோது திடீரென மாரடைப்புக்கு உள்ளானதாக அவரது சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், தற்போது அவருக்கு திறந்த இருதய சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படுவதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், அரச தரப்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இதற்கு மாறுபட்ட தகவலை வெளியிட்டுள்ளார்.
ஷிராந்தி ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும், அவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படுவது தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் நீதிமன்றத்தில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
சிறைச்சாலை அதிகாரிகள் சமர்ப்பித்த அறிக்கையில், ஷிராந்தி ராஜபக்ஷ கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 61ஆம் இலக்க விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளமை மாத்திரமே குறிப்பிடப்பட்டுள்ளதாக நீதவான் சுட்டிக்காட்டினார்.
அவரது தற்போதைய உடல்நிலை குறித்தோ அல்லது சத்திர சிகிச்சை தொடர்பிலோ அந்த அறிக்கையில் எவ்வித தகவலும் இடம்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பினரின் முரண்பட்ட தகவல்களைக் கருத்திற்கொண்ட கொழும்பு பிரதம நீதவான், ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு உண்மையில் திறந்த இருதய சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படுகின்றதா என்பதை உடனடியாக உறுதிப்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், அவரது உடல்நிலை தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பிக்கும் வரை வழக்கு விசாரணை இன்று பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஷிராந்திக்கு திடீர் மாரடைப்பு இருதய சத்திர சிகிச்சையா நீதிமன்றத்தில் ஏற்பட்ட திடீர் திருப்பம் முன்னாள் முதற்பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவின் உடல்நிலை தொடர்பில் கொழும்பு நீதிமன்றத்தில் இன்று வெளியான தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.'சிரிலிய சவிய' கணக்கில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேட்டுக் குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் முதற்பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, இன்று (13) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது ஷிராந்தி ராஜபக்ஷ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவில்லை.ஷிராந்தி ராஜபக்ஷ நேற்று சிறைச்சாலையில் இருந்தபோது திடீரென மாரடைப்புக்கு உள்ளானதாக அவரது சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.இதனையடுத்து, அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், தற்போது அவருக்கு திறந்த இருதய சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படுவதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா குறிப்பிட்டுள்ளார்.ஆனால், அரச தரப்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இதற்கு மாறுபட்ட தகவலை வெளியிட்டுள்ளார்.ஷிராந்தி ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும், அவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படுவது தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.இதனால் நீதிமன்றத்தில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.சிறைச்சாலை அதிகாரிகள் சமர்ப்பித்த அறிக்கையில், ஷிராந்தி ராஜபக்ஷ கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 61ஆம் இலக்க விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளமை மாத்திரமே குறிப்பிடப்பட்டுள்ளதாக நீதவான் சுட்டிக்காட்டினார்.அவரது தற்போதைய உடல்நிலை குறித்தோ அல்லது சத்திர சிகிச்சை தொடர்பிலோ அந்த அறிக்கையில் எவ்வித தகவலும் இடம்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.இரு தரப்பினரின் முரண்பட்ட தகவல்களைக் கருத்திற்கொண்ட கொழும்பு பிரதம நீதவான், ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு உண்மையில் திறந்த இருதய சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படுகின்றதா என்பதை உடனடியாக உறுதிப்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.மேலும், அவரது உடல்நிலை தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பிக்கும் வரை வழக்கு விசாரணை இன்று பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.