எல்ல - வெல்லவாய பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் திருமணமாகி இரண்டு மாதங்களேயான ஆண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த நபரின் மனைவி கர்ப்பமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தங்காலை வலயக் கல்வி அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியரே இவ்வாறு உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து உயிரிழந்தவரின் மனைவி கருத்துத் தெரிவிக்கையில்,
எனது உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் இந்த சுற்றுலாவில் இணைந்து கொள்ளவில்லை. மற்ற அனைவரும் சென்றதால் என் கணவர் சென்றார்.
எனது கணவர் அன்பானவர், அவர் என் உணர்வுகளைப் புண்படுத்தும் ஒரு வார்த்தை கூட கூறியதில்லை. நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம்.
என் கணவர் கடைசியாக ராவண எல்ல அருவிக்கு அருகில் வைத்து எனக்கு தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தினார்.
அதனால் அவர் இரண்டு மணி நேரத்தில் வீட்டுக்கு வந்துவிடுவார் என்று நினைத்தேன். ஆனால் அவர் வரவில்லை.
அதனால் நான் பல முறை அவருக்கு அழைப்பை மேற்கொண்டேன். ஆனால் அவருடைய தொலைபேசி இயங்கவில்லை.
பின்னர் தான் விபத்து தொடர்பிலான செய்தியைக் கேள்வியுற்றேன், இந்த துக்கத்தை நான் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்" ' என கண்ணீருடன் கூறியுள்ளார்.
நேற்று இரவு, எல்ல – வெல்லவாயைச் சாலையில் மகவாங்குவ “மவுண்ட் ஹேவன் ஹால்” அருகே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
வெல்லவாயை நோக்கிச் சென்றிருந்த சுற்றுலா பேருந்தொன்றை, எதிரே வந்த ஜீப் வாகனம் மோதியதில், பேருந்து சாலையோரத்தில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு வேலியில் மோதி, சுமார் 1000 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கினுள் கவிழ்ந்துள்ளது.
விபத்தில் 09 பெண்களும், 06 ஆண்களும் என மொத்தமாக 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த அனைவரினதும் பிரேதப் பரிசோதனைகளும் பதுளை மருத்துவமனையில் நடைபெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தியத்தலாவை, பண்டாரவளை ஆகிய மருத்துவமனைகளில் வைக்கப்பட்டுள்ள இறந்தவர்களின் உடல்கள் பதுளை மருத்துவமனைக்குக் கொண்டு வரப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
திருமணமாகி இரு மாதங்களில் கணவனை இழந்த கர்ப்பிணி மனைவி - விபத்தால் நடந்த துயரம் எல்ல - வெல்லவாய பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் திருமணமாகி இரண்டு மாதங்களேயான ஆண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த நபரின் மனைவி கர்ப்பமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தங்காலை வலயக் கல்வி அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியரே இவ்வாறு உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து உயிரிழந்தவரின் மனைவி கருத்துத் தெரிவிக்கையில்,எனது உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் இந்த சுற்றுலாவில் இணைந்து கொள்ளவில்லை. மற்ற அனைவரும் சென்றதால் என் கணவர் சென்றார். எனது கணவர் அன்பானவர், அவர் என் உணர்வுகளைப் புண்படுத்தும் ஒரு வார்த்தை கூட கூறியதில்லை. நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம். என் கணவர் கடைசியாக ராவண எல்ல அருவிக்கு அருகில் வைத்து எனக்கு தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தினார். அதனால் அவர் இரண்டு மணி நேரத்தில் வீட்டுக்கு வந்துவிடுவார் என்று நினைத்தேன். ஆனால் அவர் வரவில்லை. அதனால் நான் பல முறை அவருக்கு அழைப்பை மேற்கொண்டேன். ஆனால் அவருடைய தொலைபேசி இயங்கவில்லை. பின்னர் தான் விபத்து தொடர்பிலான செய்தியைக் கேள்வியுற்றேன், இந்த துக்கத்தை நான் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்" ' என கண்ணீருடன் கூறியுள்ளார். நேற்று இரவு, எல்ல – வெல்லவாயைச் சாலையில் மகவாங்குவ “மவுண்ட் ஹேவன் ஹால்” அருகே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. வெல்லவாயை நோக்கிச் சென்றிருந்த சுற்றுலா பேருந்தொன்றை, எதிரே வந்த ஜீப் வாகனம் மோதியதில், பேருந்து சாலையோரத்தில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு வேலியில் மோதி, சுமார் 1000 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கினுள் கவிழ்ந்துள்ளது. விபத்தில் 09 பெண்களும், 06 ஆண்களும் என மொத்தமாக 15 பேர் உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்த அனைவரினதும் பிரேதப் பரிசோதனைகளும் பதுளை மருத்துவமனையில் நடைபெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தியத்தலாவை, பண்டாரவளை ஆகிய மருத்துவமனைகளில் வைக்கப்பட்டுள்ள இறந்தவர்களின் உடல்கள் பதுளை மருத்துவமனைக்குக் கொண்டு வரப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.