• Jul 27 2025

செம்மணியில் இதுவரையில் 81 எலும்புக்கூடுகள் மீட்பு!

shanuja / Jul 25th 2025, 10:03 pm
image

செம்மணி மனித புதைகுழியில் இதுவரை 81 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. 



செம்மணி மனித புதைகுழி அகழ்வு தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் இதனை தெரிவித்தார்.



இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

செம்மணி மனித புதைகுழியில் வெள்ளிக்கிழமை இரண்டு மனித எலும்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டன.


அத்துடன் ஏற்கனவே 76 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெக்கப்பட்டிருந்தன. இன்று புதிதாக ஐந்து மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டன. 


இதுவரை மொத்தமாக 81 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.


அதே நேரம் இரண்டாவது அகழ்வு தளமாக அடையாளப்படுத்தப்பட்ட பகுதியில் சட்டரீதியாக புதைக்கப்பட்ட சடலம் ஒன்று நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக பாதுகாப்பாக மூடப்பட்டது - என்றார்.

செம்மணியில் இதுவரையில் 81 எலும்புக்கூடுகள் மீட்பு செம்மணி மனித புதைகுழியில் இதுவரை 81 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழி அகழ்வு தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் இதனை தெரிவித்தார்.இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,செம்மணி மனித புதைகுழியில் வெள்ளிக்கிழமை இரண்டு மனித எலும்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டன.அத்துடன் ஏற்கனவே 76 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெக்கப்பட்டிருந்தன. இன்று புதிதாக ஐந்து மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டன. இதுவரை மொத்தமாக 81 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.அதே நேரம் இரண்டாவது அகழ்வு தளமாக அடையாளப்படுத்தப்பட்ட பகுதியில் சட்டரீதியாக புதைக்கப்பட்ட சடலம் ஒன்று நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக பாதுகாப்பாக மூடப்பட்டது - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement