• Jul 27 2025

விறகு சேகரிக்கச் சென்ற பெண் மாயம் - மூன்றாவது நாளாகவும் தொடரும் தேடுதல் வேட்டை!

Thansita / Jul 27th 2025, 10:06 am
image

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள லக்கம் தனியார் தோட்டத்தில் உள்ள பெண் நேற்று முன்தினம் 25 ம் திகதி  விறகு சேகரிக்க சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார்

தோட்ட தொழிலாளர்கள் மஸ்கெலியா பொலிசார் மற்றும் ரக்காடு கிராமத்தில் உள்ள அதிரடி படையினர் இணைந்து மூன்றாவது நாளாக தொடர்ந்தும் தேடி வருகின்றனர்

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள லக்கம் தனியார் தோட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற வாய் பேச முடியாத 56 வயது மதிக்க தக்க புஸ்பலீலா என்ற ஒரு பெண் குழந்தையின் தாய் நேற்று முன்தினம் 25 ம் திகதி காலை 8.30 மணிக்கு அதே தோட்டத்தில் உள்ள பகுதியில் விறகு சேகரிக்க சென்று வீடு திரும்பவில்லை 

இந்நிலையில் அவரை காணவில்லை என  மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது

இது குறித்து மஸ்கெலியா பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூன்றாவது நாளாக இன்று 27 ம் காலை லை முதல் ரக்காடு பகுதியில் உள்ள அதிரடி படையினர் மற்றும் மஸ்கெலியா பொலிசார் லக்கம் தனியார் தோட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் தேடும் பணியில் ஈடுபட்டு பட்டு வருகின்றனர்.

இன்று காலை முதல் மீண்டும் அதிரடி படையினர் மற்றும் மஸ்கெலியா பொலிசார் லக்கம் தனியார் தோட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் தற்போது வரை தேடும் பணி தொடர்ந்து இடம் பெற்று வருகிறது.

இருந்த போதிலும் தற்போதைய நேரம் வரை அவரை கண்டு பிடிக்க முடியவில்லை எனவும் தொடர்ந்தும் தோட்ட தொழிலாளர்கள் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.


விறகு சேகரிக்கச் சென்ற பெண் மாயம் - மூன்றாவது நாளாகவும் தொடரும் தேடுதல் வேட்டை மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள லக்கம் தனியார் தோட்டத்தில் உள்ள பெண் நேற்று முன்தினம் 25 ம் திகதி  விறகு சேகரிக்க சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார்தோட்ட தொழிலாளர்கள் மஸ்கெலியா பொலிசார் மற்றும் ரக்காடு கிராமத்தில் உள்ள அதிரடி படையினர் இணைந்து மூன்றாவது நாளாக தொடர்ந்தும் தேடி வருகின்றனர்குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதுமஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள லக்கம் தனியார் தோட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற வாய் பேச முடியாத 56 வயது மதிக்க தக்க புஸ்பலீலா என்ற ஒரு பெண் குழந்தையின் தாய் நேற்று முன்தினம் 25 ம் திகதி காலை 8.30 மணிக்கு அதே தோட்டத்தில் உள்ள பகுதியில் விறகு சேகரிக்க சென்று வீடு திரும்பவில்லை இந்நிலையில் அவரை காணவில்லை என  மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதுஇது குறித்து மஸ்கெலியா பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மூன்றாவது நாளாக இன்று 27 ம் காலை லை முதல் ரக்காடு பகுதியில் உள்ள அதிரடி படையினர் மற்றும் மஸ்கெலியா பொலிசார் லக்கம் தனியார் தோட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் தேடும் பணியில் ஈடுபட்டு பட்டு வருகின்றனர்.இன்று காலை முதல் மீண்டும் அதிரடி படையினர் மற்றும் மஸ்கெலியா பொலிசார் லக்கம் தனியார் தோட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் தற்போது வரை தேடும் பணி தொடர்ந்து இடம் பெற்று வருகிறது.இருந்த போதிலும் தற்போதைய நேரம் வரை அவரை கண்டு பிடிக்க முடியவில்லை எனவும் தொடர்ந்தும் தோட்ட தொழிலாளர்கள் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement