மண்சரிவு மற்றும் மண்சரிவு அதி-அபாய நிலை காரணமாக குடும்பங்களை மீளக்குடியமர்த்தும் திட்டத்தின் கீழ், வீடு ஒன்றை நிர்மாணிப்பதற்காக வழங்கப்படும் நிதியை திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட அல்லது மண்சரிவு அதி-அபாயப் பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களை அடையாளம் கண்டு, அவர்களை பாதுகாப்பான இடங்களில் மீளக்குடியமர்த்துவதற்காக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி, பயனாளிகளே வீடுகளை நிர்மாணிக்கும் முறையின் கீழ் அந்த குடும்பங்களுக்கு வீடுகளை அமைப்பதற்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.
இதுவரை இத்திட்டத்தின் கீழ் ஒரு வீட்டை நிர்மாணிப்பதற்காக அதிகபட்சமாக 1.6 மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டதுடன், அதனை 2.5 மில்லியன் ரூபா வரை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு இணங்க இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், குறித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மண்சரிவு அபாயக் குடும்பங்களுக்கான கொடுப்பனவு 25 இலட்சமாக உயர்வு மண்சரிவு மற்றும் மண்சரிவு அதி-அபாய நிலை காரணமாக குடும்பங்களை மீளக்குடியமர்த்தும் திட்டத்தின் கீழ், வீடு ஒன்றை நிர்மாணிப்பதற்காக வழங்கப்படும் நிதியை திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட அல்லது மண்சரிவு அதி-அபாயப் பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களை அடையாளம் கண்டு, அவர்களை பாதுகாப்பான இடங்களில் மீளக்குடியமர்த்துவதற்காக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி, பயனாளிகளே வீடுகளை நிர்மாணிக்கும் முறையின் கீழ் அந்த குடும்பங்களுக்கு வீடுகளை அமைப்பதற்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.இதுவரை இத்திட்டத்தின் கீழ் ஒரு வீட்டை நிர்மாணிப்பதற்காக அதிகபட்சமாக 1.6 மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டதுடன், அதனை 2.5 மில்லியன் ரூபா வரை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு இணங்க இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், குறித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.