• Mar 10 2026

அனர்த்த நிலைமைகளால் பாதிக்கப்பட்டுள்ள தேயிலை, தெங்கு மற்றும் இறப்பர் போன்ற விவசாய ஏற்றுமதிப் பயிர்களின் மீள்நடுகைக்கு உதவிகள் - அமைச்சரவை அனுமதி!

shanu / Mar 10th 2026, 5:46 pm
image

2025 நவம்பர் மாத நடுப்படுகுதியில் இடம்பெற்ற சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்கள், மரக்கறி மற்றும் பழச் செய்கைகளைத் துரிதமாக மீள்பயிரிடல் செய்வதற்கு விவசாயிகளுக்கு உதவிகளை வழங்குவதற்கும், இவ்வனர்த்த நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ள மிளகு, கோப்பி மற்றும் ஏலக்காய் போன்ற சிறு ஏற்றுமதிப் பயிர்களின் மீள்செய்கைக்கு உதவிகளை வழங்குவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம்  வழங்கியுள்ளது. 


இவ் உதவிகளை ஏற்புடைய பயனாளி விவசாயிகளுக்கு வழங்குவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன், பாதிக்கப்பட்டுள்ள தேயிலை, தெங்கு மற்றும் இறப்பர் போன்ற பயிர்களின் மீள்செய்கைக்கு உதவிகளை வழங்க வேண்டிய தேவை பற்றி பெருந்தோட்ட மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சால் திறைசேரிக்கு விதந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. 


குறித்த விதப்புரைகளின் அடிப்படையில், அனர்த்தத்தின் பாதிப்புக்களுக்கமைய கீழ்க்குறிப்பிட்ட வகையில் உதவிகளை வழங்குவதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 


தேயிலைச் செய்கைக்கு உயர்ந்தபட்சம் ஹெக்ரயார் ஒன்றுக்கு 500,000- ரூபா வரைக்கும் 

இறப்பர் செய்கைக்கு உயர்ந்தபட்சம் ஹெக்ரயார் ஒன்றுக்கு 400,000- ரூபா வரைக்கும் 

தெங்கு செய்கைக்கு உயர்ந்தபட்சம் ஹெக்ரயார் ஒன்றுக்கு 750,000- ரூபா வரைக்கும்  வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

அனர்த்த நிலைமைகளால் பாதிக்கப்பட்டுள்ள தேயிலை, தெங்கு மற்றும் இறப்பர் போன்ற விவசாய ஏற்றுமதிப் பயிர்களின் மீள்நடுகைக்கு உதவிகள் - அமைச்சரவை அனுமதி 2025 நவம்பர் மாத நடுப்படுகுதியில் இடம்பெற்ற சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்கள், மரக்கறி மற்றும் பழச் செய்கைகளைத் துரிதமாக மீள்பயிரிடல் செய்வதற்கு விவசாயிகளுக்கு உதவிகளை வழங்குவதற்கும், இவ்வனர்த்த நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ள மிளகு, கோப்பி மற்றும் ஏலக்காய் போன்ற சிறு ஏற்றுமதிப் பயிர்களின் மீள்செய்கைக்கு உதவிகளை வழங்குவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம்  வழங்கியுள்ளது. இவ் உதவிகளை ஏற்புடைய பயனாளி விவசாயிகளுக்கு வழங்குவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன், பாதிக்கப்பட்டுள்ள தேயிலை, தெங்கு மற்றும் இறப்பர் போன்ற பயிர்களின் மீள்செய்கைக்கு உதவிகளை வழங்க வேண்டிய தேவை பற்றி பெருந்தோட்ட மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சால் திறைசேரிக்கு விதந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. குறித்த விதப்புரைகளின் அடிப்படையில், அனர்த்தத்தின் பாதிப்புக்களுக்கமைய கீழ்க்குறிப்பிட்ட வகையில் உதவிகளை வழங்குவதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தேயிலைச் செய்கைக்கு உயர்ந்தபட்சம் ஹெக்ரயார் ஒன்றுக்கு 500,000- ரூபா வரைக்கும் இறப்பர் செய்கைக்கு உயர்ந்தபட்சம் ஹெக்ரயார் ஒன்றுக்கு 400,000- ரூபா வரைக்கும் தெங்கு செய்கைக்கு உயர்ந்தபட்சம் ஹெக்ரயார் ஒன்றுக்கு 750,000- ரூபா வரைக்கும்  வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement